பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

漫带 கைக்கோலன் என்றும் இப்பெயர் உபயோகிக்கப்பட்டிருப்,ை காண்க. - (7) கம்மாளன் இது தொண்டைமண்டல சதகத்திலும், ஏரெழு பதிலும் கண்ணுளன் என்று உபயோகிக்கப்பட்டிருக்கிறது. கம். ஆளன்=வேலை செய்பவன் என்று பொருளாம். இரும்பு முதலிய லோகங்களில் வேலை செய்பவர்களாகும்; கருமான் என்பதைக் காண்க. கருமான் என்பது கர்மாரன் எனும் சம்ஸ்கிருத மொழியின் சிதைவாம். - (8) வாணியன் வணிகன் என்னும் மொழியின் சிதைவாம். வாணிபம்=வர்த்தகம் செய்பவன், வணிகன். ஆதியில் எந்த வர்த்த கம் செய்பவர்களுக்கும் இப்பெயர் இருந்தது; கூல வாணிகர் சாத்த ஞர் என்பதைக் காண்க. தற்காலம் எண்ணெய் வர்த்தகஞ் செய்பவர் களுக்கே பெரும்பாலும் இப்பெயர் வழங்கப்படுகிறது. (9) வன்னியர் என்பது வன்னி அல்லது அக்னி யென்பதின் திரியென்று எண்ணப்படுகிறது. இச்சாதியார் அக்னியில் வந்தவர் என்று கூறிக் கொள்வதை கவனிக்க, (12) கன்னடியர் கன்னட தேசத்தவர், கன்னட பாஷை பேசு பவர் என்று பொருள்படும். கன்னடம் என்பது கர்நாடகம் என். பதின் திரிபாம். சென்னை முதலிய ஊர்களில் தயிர் மோர் முதலிய விற்பவர்கள் இப்பாஷை பேசுவதால் கன்னடியர் என்று அழைக் கப்படுகின்றனர், கன்னட+இடையர்= கன்னடியர் என்ருயது என்று எண்ணுவதற்கும் இடமுண்டு. . (13) செட்டி என்பது சிரேஷ்டி என்பதின் திரிபாம். சிரேஷ்ட மானவன் என்று பொருள்படும். இது முற்காலத்தில் வர்த்தகம் செய்பவர்களுக்குப் பட்டப்பெயராக அளிக்கப்பட்டதாம். வேளான் செட்டி யென்பதைக் காண்க. பிற்காலத்தில் செட்டி யென்றும் ஜாதிப் பெயராக மாறியது. சில தெலுங்கு பேசும் ஜாதியாரும் செட்டி யென்கிற பெயரைக் கொண்டிருத்தல்காண்க, சிரேஷ்டி என்பது சமஸ்கிருத மொழியாம். பெரும்பாலும் வியாபாரம் செய்யும் கோமுட்டி ஜாதியாரும் செட்டி எனும் பெயரைவைத்துக் கொள்ளுதல் கவனிக்கத்தக்கது. - . * - *: