பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 爱0 அவற்றுள் எண்பதுக்கு மேலாக விஷ்ணுவின் பெயரோ, சிவபிரான் பெயரோ, முருகக்கடவுள் பெயரோ, நாயன்மார்கள், ஆழ்வாராதிகள் பெயராகவோ யிருக்கும். இப்பெயர்களுள்ளும் ராமன், கிருஷ்ணன் என்னும் பெயர்கள், அல்லது அப்பெயர்கள் கலந்த நாமங்கள் நூற் நிற்கு முப்பதுக்கு மேலாக இருக்கும் : சில பெயர்கள் சில ஜில்லாக்களில் மாத்திரம் வழங்கப்படு கின்றன. உதாரணமாக, மதுரை திருநெல்வேலி ஜில்லாக்களில், சோணமுத்து, சுடலைமுத்து, பேச்சிமுத்து முதலிய பெயர்களைக் கவனிக்க. r . ஜாதிப் பெயர்கள் இனி தமிழ் நாட்டில் வழங்கும் ஜாதிகளின் பெயர்களைச் சற்று ஆராய்வோம். பூர்வகாலத்தில் தமிழ் காட்டு நிலங்கள் குறிஞ்சி, பால, முல்லை, மருதம், நெய்தல் என் ஐவகையாகப் பிரிக்கப்படடிருப் பதை முன்பே குறித்துள்ளோம். பாலை என்பதை நீக்கி மற்ற நான்கு வகை கிலங்கட்கு நானிலம் எனப் பெயர் கூறப்பட்டிருக்கிறது. (1) குறவர் இவர்கள் குறிஞ்சி நிலத்தில் வசிப்பவர் ஆவார். அதாவது மலைநாட்டில் வசிப்பவர். இவர்கள் வாழும் ஊர்களுக்கு குறிஞ்சி என்று சாதாாணப் பெயராம். இவர்கள் தெய்வமாகிய முருக வேளுக்கு. குறிஞ்சிக் கிழவன் என்று பெயர் உண்டு. முருகர் மணந்த வள்ளிக்குக் குறமகள் என்று பெயரிருப்பதைக் காண்க 3. (2) வேளாளர் இம்மதமானது வெள்ளாழன் அல்லது வெள் ளாளன் என்று சாதாரணமாக வழங்கப்படுகிறது ; வெள்ளத்தை ஆள்பவன் வெள்ளாளன் என்று பொருள் கூறப்பட்டிருக்கிறது. ஆறு களின் மூலமாக வரும் வெள்ளத்தை மருத கிலத்திற்குத் திருப்பி, அவைகளைப் பயிரிடுவதற்கு உபயோகப்படும்படிச் செய்வதினுல் இப் பெயர் கிடைத்ததாம். வேளாளத் தலைவர்களுக்கு வேளிர் என்று பெயர். வேள்=நங்கிலம், ஆகவே நிலத்தை யாள்பவருக்கு வேளாளர் என்று பெயர் என்று திரு கனகசுந்தரம் கூறியுளர், (3) காராளர். கார்காத்தார். கார்+காத்தார் கார் என்ருல் மேகம் மேகங்களினின்றும் இழியும் ஜலத்தை குளங்களிலும் ஏரி லும் சொரிந்து நிலப்பயிருக்கு உபயோகப்படுத்துபவர் என்று அர்த்த