பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மா. , தொடி (ஒரு பூர்வீக இடை அளவு) இசிதிை (சுமார் : பலம்) பூர்வீகக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. இவரை 1. கலம் (தொல்காப்பியம்) துகை ஒரு சிறிய அளவு கிலமளக்கும் சதுர அளவைக் குறிக்கும்பழைய மொழிகளாகிய, மா, காணி, குழி, வேலி முதலிய தமிழ் மொழிகள் இன்றும் தமிழ் நாட்டில் வழக்கத்தில் இருந்தபோதிலும் சீக்கிரம் இவைகள் மறைந்து போகும்போல் இருக்கிறது. கழஞ்சு என்பது பொன்னை கிறுக்கும் ஓர் பழய இடையாகும். இது தற்காலம் சுமார் 72 முதல் 80 கிரெயின் (Grain) வரைக்குமாகும். சிறங்கை என்பது ஒர் பழைய அளவைக் குறிக்கும் சுத்த தமிழ் மொழியாம். சுமார் 40, 50 வருடங் களுக்கு முன் அது சாதாரண உபயோகத்திலிருந்தது. தற்காலம் அதை உபயோகிப்பவர் மிகவும் சிலரே. வழக்கற்றுப்போன இசைத்தமிழ் சொற்கள் : இசைத்தமிழ் முத்தமிழின் ஓர் பகுதியாகும். வடமொழி கலப்பு வருவதற்குமுன்னரே, தமிழர்கள் இசையில் மிகவும் பயிற்சிப் பெற் றிருந்தார்கள் என்பதற்குத் தடையில்லை. ஆகவே அதற்குரிய தமிழ் மொழிகளும் பூர்வ காலத்தில் வழக்கில் இருந்திருக்க வேண்டும். சங் கீதத்தின் அஸ்திவாரமாகிய சப்த ஸ்வரங்களாகிய ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம் தைவதம், நிஷாதம் என்கிற பெயர்கள் தான் தற்காலம் வழக்கத்திலிருக்கும் சமஸ்கிருத மொழிகளாம். தமிழர் கள் ஆதிகாலத்தில் அவைகளுக்கு குரல், துத்தல், கைக்கிளை, ஊழ், இளி, விளரி, தாரம் என்று பெயரிட்டிருந்தனர்; இப்பெயர்களெல்லாம் சுத்த தமிழ் மொழிகள். இதுவொன்றே ஆதிகாலத்தில் தமிழ் நாட்டில் வழங்கிய இசையானது, வடக்கேயிருந்து வந்த சங்கீதக் கலையினின் றும் உதித்ததன்று என்று ரூபிப்பதாகும். ராகம் என்பது சமஸ்கிருத மொழியாம், அது பூர்வத்தின் தமிழில் பண் எனும் பெயருடைத்தா யிருந்தது. பண் என்பது தற்காலத்தில் வழங்கும் மேள கர்த்தா ராகத்திற்கு ஒப்பாகும் என்று மஹாமஹோபாத்யாயர் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். பூர்