பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

________________

வாயில் ஒரு துண்டை சுவைத்தால் ஐ.லுப்பு, கபம், இருமல் இவைகளைக் குணப்படுத்தும் (2) பேர் அரத்தை --வாத நோய், பித்த கபம், இவைகளை குணப்படுத்தும்--நல்ல பலம் தரும். சூரணம் செய்து சாப்பிடவும். அரிசி - பொது குணம் - உடம்பிற்கு நல்ல உணவாம். சர்க்க ரைப் பொருள் {Carbohydrates) அதிகம் இதில் கைகுத்தல் அரிசியே மேலானது ; அரிசிமில் (யந்திரம்) களில் குத்தப்பட்ட அரிசி அவ்வளவு நல்ல தல்ல; இதனால் அரிசியிலிருக்கும் சில ஜீவசத்துக்கள் போய்விடுகின் றன. அரிசியின் தவிட்டில் ஜீவ சத் துக்கள் இருக்கின்றன; இது மலத்தைத் தள்ளும் குணமுடையது. ஒரு அவுன்ஸ் அரிசி 100 காலோரி {Galory) குண முடையது. அரிசியை கஞ்சிவடிக்காது புசித்தல் நலம். சாதாரணமாக அரிசிச் சாப்பாடு சீரணமாகுங் காலம் 1-மணி முதல் 21-மணிக்குள் ளாக, கைகுத்தல் அரிசியில் உயிர் சத்துகள் (ஏ) (பி) இருக்கின்றன. அரிசி வகைகளில் சீரகச் சம்பா, காளான் சம்பா, காடைச் சம்பா, கோடைச் சம்பா, குன்றிமணி சம்பா, மூங்கில் அரிசி, திப்பிலி அரிசி நல்லது. கார் அரிசி, மணக்கத்தை அரிசி, குண்டு சம்பா, குறுஞ் சம்பா அவ்வளவு நல்லவை அல்ல, கரப்பான், சிரங்கை விளைக்கும். கம்பு அரிசி அவ்வளவு நல்லதல்ல ; நமை சிரங்கு இவைகளை விர்த்தி செய்யும்---காசம், சுவாச நோய் இவை களுக்கு ஆகாது. ஆனால் (எ) (பி) உயிர்சத்துகள் உடையது. மல்லிகைச் சம்பா- நல்ல உணவாம், கரப்பானைப் போக்கும். மணிச்சம்பா நல்லது-அதிமூத்திரத்தை நீக்கும்விருத்தர்களுக்கும் பாலர்களுக்கும் உதவும் --மது மூத்தி ரத்தைக் குறைக்கும்.