பக்கம்:கள்வர் தலைவன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி:3.) கள்வர் தல்வன் ?፫ கொண்டு போகின்ருர்கள். ஈசனே எல்லாம் உனது திரு வருள். (சேவகர்களெல்லாம் பாலசூரியனை அழைத்துக்கொண்டு போகிருர்கள்.) காட்சி முடிகிறது மூன்ருங் காட்சி, இடம்: குமாரபுரம். ஏமாங்கதன் பாசறை. செளமாலினி படுக்கையின்மீது மரணுவஸ்தையிலிருக்கின்ருள் கால்மாட்டில் சுசங்கதை இறந்த கைக்குழங்தையை வைத்துக்கொண்டழுதுகொண்டிருக்கின்ருள். ஏமாங்கதன் தலையருகில் உட்கார்ந்திருக்கிருன், ஜெயபாலன் ஒருபுறமாய் கிற்கின்ருன். காயளுர், வயத்தான், முதலிய கள்வர் வாயில் காத்து கிற்கின்றனர். செள. கண்ணே பாலசூரியா ? எங்கே.பாலசூரியன் ஏன் வரவில்லை முன்பே வருவான், என்று சொன்னரே ! சு. அம்மா, சற்றுப்டொறும் வருவான், இதோ வந்து விடுவான். - - செள். ஏன் பொய்பேசுகின்றீர் அவன் வரவேமாட்டான் எனக்குத் தெரியும்! ஜெயபாலன் ஏமாங்கதனை மெல்ல சைகை செய்தழைக்கிருன்1 - ஜெ. (ஒரு புறமாய் ஏமாங்கதனுக்கு) ஐயனே வருத்தப்படாதீர்! இனி பிரயோஜனமில்லே! என்னலியன்றவளவு பிரயத் தினப்பட்டு பார்த்தேன் மிஞ்சிவிட்டது. சீக்கிரம் உயிர் போகும் நேரமாய் விட்டது ! - சு. அண்ணு வாரும் இப்படி சீக்கிரம் வாரும் ! செள. பிராணகாதா பிராணங்ாதா (ஏமாங்கதன் செள் மாலினியிடம் போகிருன்) என்ன நம்முடைய அரண் மனேயில் சந்தடியற்றிருக்கின்றதே-பிராணநாதா அந்த மட்டும் நாம் அனுபவித்த துன்பங்களெல்லாம் போய் இப்பொழுதாவது சுகமடைந்தோமே ! பிராணகாதா 1 பாலசூரியனுக்கு விவாகஞ்செய்ய வேண்டிய காலமாய் விட்டது!-அவனுக்கு மகததேசத்து அரசன் பெண்ணே விவாகஞ்செய்வித்து, சீக்கிரம் பட்டம் கட்டி நாம் பார்க்கவேண்டாமா -இதோ! பாலசூரியன் !-இதோ! பாலசூரியன் - பாலசூரியா என் சொற்படி கட! சீக்கிரம் விவாகஞ் செய்து கொண்டு இந்நாட்டையாள் -என் கைக்குழந்தை இறந்தது என்று யார் சொன்னது ! இதோ பாலசூரியன் கையில் அது சிரித்துக் கொண்டிருக் கின்றதே ! பாலசூரியா ! இப்படி கொடு அதை :-இந்த ஆற்றைக் கடந்தா கான் வரவேண்டும் ?-கான் பயப் படவில்லை இதோ வருகின்றேன். பிராணகாதா! நீரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/75&oldid=779783" இலிருந்து மீள்விக்கப்பட்டது