பக்கம்:கள்வர் தலைவன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) கள்வர் தலேவன் 19 கெடுதி கினைப்பாயாயின் உடனே நான் பிதாவிடம் எல் லா உண்மையையும் கூறிவிடுவேன். அதற்குச் சந்தேக மில்லை. என்ன சொல்லுகின்ருய் ? -உன்னிடம் இங்கு பேசிக்கொண்டிருப்பதை விட அவளிடம் போய் அவ ளுக்குத் தேறுதல் சொல்லினலும் சிறிது புண்ணிய முண்டு. நான் சொன்னது மாத்திரம் நன்ருய் ஞாபக மிருக்கட்டும். (போகிருள்) செளரி. இதென்ன இழவு ! தொந்தரவின்மீது தொந்தரவாய் வருகின்றது! இந்த சங்கடத்திற்கென்ன செய்வது?(மேஜையின் மீது வைத்திருக்கும் மணி அடிக்கிறது) அப்பா ! ஏமாங்கதன் இறந்தான் ! (விரைந்து எழுந்திருக்கின்றன்.) பலாயனன் விரைந்து வருகின்ருன். செளரி இறந்தான ஏமாங்கதன் ? ப. பிறந்தான் ஏமாங்கதன் தப்பித்துக்கொண்டான் ! செளரி. ஆ! தப்பித்துக்கொண்டான ? ப. ஆம் புலியூர்வரையில் சங்கனும் விடங்கனும் பின் தொடர்ந்து சென்ருர்களாம் : அங்கே சாயங்காலம் ஒரு குடியானவன் வீட்டில் துழையக்கண்டு அன்றிரவு கொன்றுவிடத் தீர்மானித்து இருட்டியவுடன் உள்ளே சென்று பார்க்க, இதற்குள் எங்கேயோ போய்விட்டா ம்ை. பிறகு எங்குதேடியும் அவன் சென்ற வழி தெரி யாது திரும்பி வந்துவிட்டனர். - - செளரி. கழுதைகள்! சும்ம்ாவாகவா திரும்பி வந்துவிட்டார். கள் அக்குடியானவனேப் பிடித்துக் கேட்கின்றது தானே ? - - ப, கேட்டார்களாம், அவன் ஒன்றும் தெரியாதென்கிருளும் என்ன பயமுறுத்தியும். : செளரி. ஒருவேளை புலியூருக்கடுத்த தாமகாரண்யத்திற்குப் போய் ஒளிந்திருந்தாலு மிருக்கலாம். பலாயன அந்தக் கழுதைகளே உடனே புறப்பட்டு மாறுவேடம் பூண்டு து மகாரண்யத்திற் போய்த்தேடச் செய், ஏமாங்கத னேக் கொன்ருலொழிய திரும்பி வரக்கூடாதென்று நான் கட்டளையிட்டதாகச் சொல். அப்படித் திரும்பிவந்தால் என்ன கதி என்று அவர்களுக்கே தெரியும். உடனே புறப்படச்சொல் சீக்கிரம். ப. இதோ சொல்லுகின்றேன்-ஆயினும் அப்படியே-விட்டு விட்டால் ? பாவம் இனி அவன் நம்மை என்ன செய்யக் கூடும் ! நம்முடைய காரியமோ நிறைவேறி விட்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/23&oldid=779726" இலிருந்து மீள்விக்கப்பட்டது