பக்கம்:கள்வர் தலைவன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கள்வர் தல்வன் (அங்கம்-2 சு. ஏமாங்கதன் உன் பகைவனல்லவே, சொந்த தமையன் தானே! நீ அவன் காவில் வீழ்ந்தாலென்ன ? செளரி. அவன் என் தமையன யிருப்பதினற்ருன் என் பகை வைைன்!-சுசங்கதா! மறுபடியும் இந்த வார்த்தையை என்னிடம் கூறவேண்டாம் போ ! சு. சரி! இனி உன்னுடன் பேசி பிரயோஜனமில்லே. கெடுமதி கண்ணுக்குத்தோன்றுமா ? உன் தலைவிதிப்படி நடக்கின் றது. கானென்னசெய்வது (போகிருள்) செளரி. இந்தசுசங்கதை ஏமாங்கதனுக்காக இவ்வளவு பாடு படுவானேன்? அன்றைத்தினமும் இதையேகேட்டாள். ஆ! அன்றைத்தினம் இங்குவந்தபொழுது சுசங்கதை ராஜ முத்திரையின் அருகில் இருந்தாளல்லவா? ஓகோ அப்படித்தானிருக்க வேண்டும் முன்பே நான் சந்தேகப் பட்டேன். சந்தேகமில்லை, இவள்தான் ஏமாங்கதனுக்கு உளவாக இருந்துகொண்டு அம்முத்திரையை அவ்வோ லேகளில் பதிப்பித்து அனுப்பி யிருக்கவேண்டும். ஆஹா! நம்முடைய அடிவயிற்றிலேயே ஒரு பாம்பிருக்கின்றதா ? சரி ! இனி சுசங்கதை ஒரு கடினம்.உயிரோடு இருப்பாளா யின் இங்குகடக்கும் விஷயங்களெல்லாம் எதிரிகளுக் கெட்டிவிடும். இவளேச்சீக்கிரம் யமபுரம் அனுப்பவேண் டும். அடடா ! இது முன்பே தெரியாமற்போயிற்றே! பாலாயணன் வருகிருன். பா. மகாராஜா ! நீர்சொன்னபடியே செய்துவிட்டு வந்தேன். செளரி சேவகன் கிருபத்தை எடுத்துக்கொண்டு சென்ருன பா. முன்பே சென்ருன், செளரி, பாலாயன இதனுடன் இக்காரியத்தை விடலாகாது காம். இந்த சங்கடத்திற் கென்ன செய்யலாமென்று தோன்றுகிற துனக்கு? பா. இதைக்குறித்துத் தம்முடன் முன்பே பேசவேண்டு மென்று நினைத்தேன். இப்பொழுதோ நாம் சித்திராயுத னிடம் இருக்கும் சைனியத்தை நம்பியிருக்கல்ாகாது. அவர்கள் அடிபட்டுச் சோர்ந்திருப்பது மன்றி ஆயுதங்க களையும் பறிகொடுத்து பெருமலேதுர்க்கத்தில் அடைப் பட்டிருக்கின்ருர்கள். ஆகவ்ே நமது எதிரிகளே அழிப் பதற்கு ஒருமார்க்கம் தோற்றுகின்றது; கேரில் அவர்களு டன் யுத்தம் செய்வதிற் பயனில்லே. இங்குள்ள சைனி யங்களெல்லாம் ஒருங்குசேர்த்து இரவில் போய் அவர் கள் உறங்கும் பொழுது அவர்களே அழித்து விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/64&oldid=779771" இலிருந்து மீள்விக்கப்பட்டது