பக்கம்:கள்வர் தலைவன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) கள்வர் தலைவன் 39 செளரியகுமாரன் விரைந்தோடி வருகிருன், செளரி. எங்கே ஜீவசித்தி (சுசங்கதையை ராஜமுத்திரையிருக்கு மிடம் கண்டு) சுசங்கதா! நீ என்ன செய்கின்ருய் இங்கே? சு. அப்பா ! பிதா தான் இறந்தாரே ! உன்னிடம் ஒரு விஷ யத்தைப் பற்றிப் பேசவந்தேன்செளரி, இப்பொழுது உன்னிடம் பேசிக் கொண்டிருக்க எனக்குக் காலமில்லை, உனக்கிங்கென்ன வேலை போ ! போ வெளியே! (சுசங்கதை வெறுத்து வெளியே போகிருள்) கண்டது. ஜெயபாலனே அல்லது அவனுடைய பிசாசோ! அல்லது என்மனப் பிரமையோ! அதே உடையிலி ருந்ததே-இந்த ஜீவசித்தியையும் காணுேம் !-காஞ் சேயா! காஞ்சேயன் வருகிருன். செளரி. அடே கண்டுபிடித்தீர்களா? கா. இன்னும் தேடுகின்ருர்கள் எங்கும் காணுேம். செளரி. அதிருக்கட்டும். இங்கு ஒரு வயித்தியன் வந்திருக் தானே அவனே யாராவது பார்த்தீர்களா? பச்சை சால்வைதலேயில் கட்டிக்கொண்டு வேருெருசால்வையை அங்கவஸ்திரமாக உடுத்திக்கொண்டிருந்தான் ! கா. ஓ ! அவரா! நான் தேடிக்கொண்டு வரும்பொழுது தாங் கள் சொன்னவண்ணம் ஒருவர் மகாராஜாவின் பிரேதம் வைத்திருக்கும் அறையில் பிரேதத்தின் கால்மாட்டில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தார், யாரோ மகாராணி யின் பந்து என்றுஎண்ணி நான் சும்மாபோய்விட்டேன்! செளரி. ஒகோ ஏதோ சமாசாரம் தெரியவில்லை : காஞ் சேயா! நான் குறித்த மனிதன் அரண்மனையிலாவதிருக்க வேண்டும், சுற்றுபுறத்திலாவது இருக்கவேண்டும். வெகு தூரம் போயிருக்கமாட்டான் இதற்குள்ளாக. பட்ட ணத்துக் கோபுரக் கதவுகளேயெல்லாம் மூடிவிடும்படி நான் கட்டளையிட்டதாகச் சொல். கம்முடைய சேவகர் கள யெல்லாம் அழைத்து இவ்விருவரையும் எங்கிருந்த போதிலும் தேடிப்பிடித்து வரச்சொல். கண்டு பிடிப்பி வனுக்கு ஆயிரம் பொன் தருவதாகப் பிரசித்தி செய். சீக்கிரம் பேர், நானும் வருகிறேன்-இதென்னவிபரீதம்! (இருவரும் விரைந்து போகிருர்கள்) காட்சி முடிகிறது. rra"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/43&oldid=779748" இலிருந்து மீள்விக்கப்பட்டது