பக்கம்:கள்வர் தலைவன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஜெ. கள்வர் தலைவன் (அங்கம்-1 ஏமாங்கதராஜனே, கான் இப்பொழுது உம்மிடம் சொல் லத் தடையில்லை. ஆயினும் அதற்குக்காரணம் கேளாத பட்சத்தில் கூறுகிறேன், என்ன சொல்லுகின்றீர் ? அப்படியே ஆகட்டும், யார் செய்தது தெரியுமா உனக்கு? உம்முடைய கைக்குழந்தைக்கு விஷங் கொடுத்துக் கொன்று அதன் பிரேதத்தை அபகரித்துச் சென் றவனும், உமக்கு விஷங்கொடுத்துக் கொல்ல முயன் றவனும்-உமது தம்பியாகிய செளரியகுமாரனே! என்ன! செளரிய குமாரன ! . ஆம்-ஆச்சரியமாயிருக்கிறதோ உமக்கு ? அப்பா ! நீ யேதோ தெரியாமையினுற் கூறுகின்ருய். என்னுடைய தம்பி ஒரு காலும் இதைக் கனவிலும் நினைத்திருக்கமாட்டான். அவன் என் குழந்தை இறந்த பொழுது துக்கித்தது சுவாமிக்கே தெரியும். அதன் பிரேதத்தை கூடிணமேனும் விட்டுப்பிரிய மனம்வரவில்லை யென்று அதன் பக்கத்திலேயே இருந்தழுததைப் பார்த் திருப்பாயாயின் இவ்வாறு ஒருகாலும் நீ கூறமாட்டாய். அதுவுமன்றி என் பிதாவின் கோபத்தைத்தணிக்க அவன் முயன்றது கொஞ்சமல்லவே ! என்னுடைய உடன்பிறந் தானும் எனக்காக அவ்வளவு பாடுபட்டிருக்க மாட் டானே !! அப்பா, இந்த தவருண எண்ணத்தை விட்டு விடு, நீ ஏதோ . சரிதான், அப்படியே இருக்கட்டும். ஒரு காலம் வரும், அப்பொழுது உமக்கு இதன் உண்மையைக் காட்டு கிறேன். அதிருக்கட்டும், அரசே உமக்கு புஷ்பபுரிக்குப் போய் முன்போல் பிதாமுதலியோருடன் சுகமாய் வாழ்க் திருக்க வேண்டுமென்று விருப்பமில்லையோ ? அப்பா ! நீ இதைக் கேட்பது எனக்கு மிகவும் ஆச்சரிய மாயிருக்கின்றது. இதைவிட எனக்கின்னும் இவ்வுலகில் சிலகாலம் உயிருடன் வாழ்ந்திருக்க விருப்பமில்லையோ வென்று கேட்டிருக்கலாம். அப்பா, என் கண்ணுக் கொப்பாய என் அருமைப் புதல்வன் பாலசூரியனையும் என் மனைவி செளமாவினியையும் நான் சீக்கிரம் காணு விட்டால் எனதுயிர் நிற்பது கடினம். அரசே, உம்முடைய கோரிக்கையை கான் நிறைவேற்று கின்றேன் ; ஆனால் நான் சொல்லுகிறபடி காரணமொன் றும் வினவாமல் செய்வீரா நீர் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/14&oldid=779717" இலிருந்து மீள்விக்கப்பட்டது