பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

69


ஒரு சமயம் தர்ஸ்டன் வண்டி ஓட்டிக்கொண்டு போயிருந்தார். அப்பொழுது அவருக்கு வயது பத்து தான். அவர் வேகமாகப் போக எண்ணி குதிரைகளை அடித்து ஓட்டினார். அடிதாங்காமல் குதிரைகள் மிரண்டு ஓடின. தர்ஸ்டன் சிறு பையனாதலால் குதிரைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவை ஒரு பெரியமரத்தில் போய் மோதி வண்டியையே உடைத்துவிட்டன. ஆனால், தர்ஸ்டன் தற்செயலாக உயிர்தப்பினார். மேலும் அவரது உடம்பில் ஒரு காயங்கூடப் படவில்லை. வண்டி உடைந்ததும் தர்ஸ்டன் பயந்து எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு, நியூயார்க் நகரத்தை நோக்கி ஓடிவிட்டார்.

நியூயார்க் நகரத்தில் தர்ஸ்டன் கூட்ஸ்களில் சாமான்களைத் திருடியும், பத்திரிகை விற்றும் வயிறு வளர்த்து வந்தார். திருட்டுத் தொழில் செய்ததினாலும், கண்ட கண்ட இடங்களில் தூங்கினதாலும் போலீஸாரால் பலமுறை கைது செய்யப்பட்டிருக்கிறார். சுமார் பன்னிரண்டு முறை சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். அவருக்குப் பதிநேழு வயது அப்போது, அவர் சீட்டுக்கட்டுகளில் தந்திர வேலைகளைச் செய்து வந்தார். வேடிக்கை பார்க்கும் மக்கள் கொடுக்கும் பணத்தைக்கொண்டு அவர் வாழ்க்கை நடத்தி வந்தார்.

ஒரு நாள் மதப்பிரசாரம் நடைபெறும் கூட்டத்திற்கு தர்ஸ்டன் சென்றார். அங்கு நடைபெற்ற பிரசங்கத்தைக் கேட்டதும் அவருக்கு மதத்தில் பற்று ஏற்பட்டது. உடனே