பக்கம்:மருதநில மங்கை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12


உடன்வாழ் பகை

ணவன், காதலித்து மணந்த தன்னை மறந்து, பரத்தை வீடு சென்று வாழ்கிறான் எனும் கவலையால் கலங்கினாள் ஒரு பெண், அவன் அன்பைப் பெற மாட்டாத தனக்கு அழகும் வேண்டுமோ என எண்ணினாள். அதனால், அவன் பிரிந்த பின்னர், மயிரை மாசுபோக, எண்ணெய் இட்டு நீராட்டி, அழகாக வாரி மணம் நாறும் மலர் சூட்டி மகிழ வேண்டும் எனும் நினைவற்றுப் போனாள். உறக்கத்தை மறந்தாள். கணவன் வருகையை எதிர்நோக்கி இரவு பகலாகக் காத்திருந்தாள். அதனால், பண்டு மலர் போலும் அழகுடையவாய் விளங்கிய அவள் கண்கள், தம் நீல நிறத்தை இழந்து, பொன்னிறப் பசலை பெற்று ஒளி இழந்தன. மாவின் இளந்தளிர்மீது, மகரந்தப் பொடி உதிர்ந்து கிடப்பது போல் மாமையும், கணங்கும் பெற்றுப் பேரழகுடைய அவள் மேனி, அவ்வழகு கெட்டுத் தளர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/79&oldid=1129640" இலிருந்து மீள்விக்கப்பட்டது