பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

காணிக்கும் அரசியல் தலைவனாக இருந்தமை பெறப்படும்: இந்நாளில் கோயில் முதலாய அறநிலையங்களையெல்லாம் பாதுகாத்தற்கு அறநிலையப் பாதுகாப்பு ஆணையர் இருத்தலை நாமறிவோம். அத்தகைய பெருந்தர அதிகாரியாக மதுராந்தகன் கண்டராதித்தன் விளங்கினானென்று கொள்ளலாம். கி. பி. 1001 வரையிலேயும் இவனது பாட்டியார் செம்பியன் மாதேவியார் சோனடு முழுவதும் பல திருக்கோயில்களைப் புதுப்பித்தும், அணிகலன்கள் முதலியன அளித்தும், பல நிபந்தங்கள் நல்கியும் சிவப்பணிகள் பல ஆற்றிய காலங்களில், இம்மதுராந்தகன் கண்டராதித்தன் தொண்டை நாட்டில் அதே போன்ற தொண்டிலேயே ஈடுபட்டிருந்தனன்.

முதற் கண்டராதித்த சோழரும், அவர் மனைவியாகிய செம்பியன் மாதேவியாரும், பேரனுகிய மதுராந்தகன் கண்டராதித்தனும், அந்நாளைய பேரரசனாகிய இராசராச சோழனும் தென்னாட்டைப் பூலோக சிவலோகமாக ஆக்கியமை அறிந்து மகிழ்வோமாக !