பக்கம்:தமிழ் அங்காடி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  57


எவ்ளோ ஒருத்தியாகத்தான் இருக்கவேண்டும் என எண்ணுகிறாள்.

                “என்னைப் போல் இடையே
                    வந்தாள் இகழ்விப் பென்" (62)

என்று பின்பும் சொல்கிறாள்.

‘தான் பத்தினியா யிருந்தால் தேவடியாள் தெருவிலும் குடியிருக்கலாம், என்பது ஒரு பழமொழி.

                “சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
                     நிறைகாக்கும் காப்பே தலை”

என்பது குறள். எனவே, கற்பு மிக்க அழகிய சீதை எங்கு இருப்பினும் தவறாக எண்ண முடியாது. இதை அரக்கி அறியாமல் ஐயப்படுகிறாள்.

பசு மந்தையின் நடுவே இருந்து கொண்டு பனங்கள்ளைக் குடிப்பினும், பார்ப்பவர்கள் பால் குடிப்பதாகவே எண்ணுவார்களாம். பனந்தோப்பின் நடுவிலே இருந்து கொண்டு பாலைப் பருகிலும் பனங்கள் குடிப்பதாகவே பார்ப்பவர்கள் மதிப்பிடுவராம். இதைப் போல் சீதையைத் தவறாக எண்ணி விட்டாள் சூர்ப்பனகை,

என்படுவர் பிறர்

மேலும் எண்ணுகிறாள் அரக்கி இவளைப் (சீதையைப்) பார்த்ததிலிருந்து இவளது அழகில் மயங்கிய என் கண்கள் வேறு எதையும் நோக்க மாட்டா; என் கருத்தும் வேறு எதிலும் செல்லவில்லை. பெண்ணாகிய எனக்கே இந்த நிலை எனில், ஆடவர்கள் இவளைக் கண்டு என்னபாடு படுவரோ?

             "கண் பிறபொருளில் செல்லா கருத்து
                 எனின் அஃதே கண்ட
             பெண் பிறந்தேனுக்கு என்றால்,
                 என்படும் பிறருக்கு என்றாள்” (60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/59&oldid=1202380" இலிருந்து மீள்விக்கப்பட்டது