பக்கம்:உத்தரகாண்டம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330   ✲   உத்தரகாண்டம்


அவளுக்கு எதுவும் பேச முடியாத நிறைவில் மனம் துளும்புகிறது.

“விக்ரம் தம்பி, என்ன உங்களுக்கு நெனப்பிருக்கா?... இத்தினி நாளா நா உங்களப்பாப்பனான்னு கெடந்தே. உங்க தாத்தா வச்ச சொத்து... அது அழியிது. மரத்த வெட்டினாங்க.” துக்கம் தொண்டையை அடைக்கிறது.

“தாயம்மா, அவங்க வச்ச சொத்து என்னிக்குமே அழியாது. ஆராலும் அழிக்க முடியாது, நம்ம காலத்துல அது நிரூபணமாகுது. இம்சையில் இருந்து அஹிம்சைதான் வர முடியும். இருட்டுக்குப்பின் உதயம்தான்னு இந்தப் பிள்ளைங்க நிரூபிக்கிறாங்க.”

“கோயில் கதவு சாத்திருக்கு. சூலத்தை கேட்டுக்கு முன்னாடி நட்டு வச்சிருக்காங்க. எதோ, பயங்கரமா...”

“இவுரு அத்தையும் ஆட்டிப் படுக்க வச்சாரு. ஆக, பூட்டின கதவுக்கு முன்ன எங்களுக்குப் புதரிலும் அங்கும் இங்கும் கிடச்ச ஆயுதங்கள கோயிலுக்கு முன்ன போட்டு நாங்க சரணடஞ்சிட்டோம்... தாத்தா!”

விக்ரம் சொல்கிறான்.

“அதுவும் சரிதான். இப்ப காந்தி இல்ல; வினோபா இல்ல; ஐய பிரகாஷ் நாராயணனும் இல்ல...”

விக்ரம் அவளையே பார்த்துப் புன்னகை செய்கிறான். அவருக்கு அசைப்பில், ராதாம்மா மாதிரி, அவள் தந்தை மாதிரி, தாய் மாதிரி தோன்றுகிறது.

“முன்ன, உங்களுக்கு நினப்பிருக்கா?... நான் குழந்தையா இருக்கையிலே, அம்மா, ரயில்வே ஸ்டேஷன்ல, ஒரு கலைடா ஸ்கோப்... வாங்கிக்குடுத்தா. கண்ணுல வச்சி திருப்பித் திருப்பிப் பாத்திட்டிருந்தேன். இங்கே, எல்லாரிட்டயும் காட்டினேன். நீங்க எனக்கு சோறுட்டினீங்க. அதை வச்சிப் பாத்தீங்க. பிறகு, அத உக்காந்து நானே ஒட்டின காகிதம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/332&oldid=1050474" இலிருந்து மீள்விக்கப்பட்டது