பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

73


“அற்புதத் தீவில் அலைஸ்” என்ற புத்தகத்தை எழுதியவரின் உண்மைப் பெயர் சார்லஸ் எல். டாட்ஸன். அவர் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கதைப் பேராசிரியராக இருந்தார். அத்துடன் அவர் ஓய்வு நேரங்களில் மதப் பிரச்சாரமும் செய்து கொண்டிருந்தார்.

ஒரு சமயம் டாட்ஸன், தேம்ஸ் நதியில் ஒரு படகில் போய்க்கொண்டிருந்தார். அவருடன் மூன்று சிறுமிகளும் இருந்தனர். அவர்கள் டாட்ஸ்னை ஒரு கதை சொல்லும்படி வேண்டிக்கொண்டனர். தேம்ஸ் நதியில் உல்லாசமாப் படகில் போய்க்கொண்டிருந்த அவர் அற்புதமான கதை ஒன்றைச் சொன்னார். அதைக் கேட்ட அச்சிறுமிகள், அதையே ஒரு புத்தகமாக எழுதினால், நன்றாக இருக்கும்; தங்களைப் போன்ற சிறுவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று வேண்டிக்கொண்டனர்.

பேராசிரியர் வீடு திரும்பியதும் அவர் படகில் சொன்ன கதையை எழுதத் தொடங்கினார். கற்பனையில் தோன்றியபடியெல்லாம் அவர் எழுதினார். அன்று அவருடன் வந்த சிறுமிகளில் ஒருத்தியான அலைஸ் என்பவளுடைய பெயரையே அப்புத்தகத்திற்கு தலைப்பாக வைக்க எண்ணினார். அதன் பயனாக அப்புத்தகத்திற்கு “அற்புதத் தீவில் அலைஸ்” என்று தலைப்புக் கிடைத்தது. ஆனால், அக்கதையை அவர் எழுதி முடித்த பிறகு, படித்துப்பார்த்தார். கதையின் போக்குப்படி அலைஸ் எனற சிறுமி தூங்கப்