பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


லிங்கோலினுடைய அரண்மனையைப் பாதுகாக்கும் படையில் வெண்டல் இருந்தார். ஒரு நாள் ஜனாதிபதி லிங்கோலின் தம்முடைய அரண்மனை மாடியின் முற்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கலகக்காரர்கள் அரண்மனையின் எதிரில் துப்பாக்கி சகிதமாகக் கூடியிருந்தனர். இதனால் ஜனாதிபதிக்கு அபாயம் ஏற்படலாம் என்று பாதுகாப்பான இடத்திற்குப் போகும்படியும் அவரிடம் ஒரு ராணுவ அதிகாரி கூறினார். ஆனால் ஜனாதிபதி போக மறுத்துவிட்டார். ராணுவ அதிகாரி வேறு வழியின்றி தாம் வந்த வழியே திரும்பிப் போய்விட்டார். ஆனால் கலகக்காரர்கள் துப்பாக்கியால் ஜனாதிபதியை சுடுவதற்கு குறி வைத்ததைப் பார்த்த வெண்டல், சிறிதும் தயங்காமல் “டேய் உள்ளே போடா” என்று உரத்த குரலில் சொன்னார். ஜனாதிபதி திடுக்கிட்டு உள்ளே போகத் திரும்பியபோது அவருக்குப் பக்கவாட்டில் ஒரு குண்டு பாய்ந்த சென்றது. ஜனாதிபதி தற்செயலாக உயிர்த்தப்பினார். பிறகு அவர் வெண்டலை அழைத்து அவருடைய கடமை உணர்ச்சிக்கு மெச்சினார். வெண்டல் மரியாதையின்றி பேசியபோதிலும் மன்னித்ததாகவும் கூறினார்.

உள்நாட்டுக் கலகம் முடிந்த பிறகு, வெண்டல் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார். அதே சமயம் அவருக்குக் கலியாணமும் ஆயிற்று ராணுவத்திலிருந்ததற்காகக் கிடைத்த சம்பளத்தைக் கொண்டு அவர் தம் மனைவியுடன்