பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


மறுநாள் அராபியக் கதையைப் படித்தார். இதிலிருந்து அவருக்கு கதைப் புத்தகம் படிப்பதில் அதிக ஆவல் ஏற்பட்டுவிட்டது. தினமும் அவர் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைப் படித்து வந்ததால் அவருடைய கல்வி அறிவு தானாகவே விருத்தி அடைந்தது. மேலும், அவர் கதைப் புத்தகங்தான் படித்தார் என்பதல்ல. அரசியல், பொருளாதாரம் இன்னும் பலவகைப் புத்தகங்களையும் படித்து முடித்தார்.

ஜாக்லண்டனுக்கு 18 வயதாகியபோது கலிபோர்னியா பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார். இரவு பகல் என்று பாராமல் படித்து மூன்றே மாதங்களில் பரீட்சையும் எழுதி தேர்வு பெற்றார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் திரும்பவும் கூலி வேலை போன்றவை செய்வதில் அவருடைய மனம் நாட்டம் கொள்ளவில்லை. அதற்கு பதில் இலக்கிய வேலையை அவர் மனம் நாடியது. ஆசை ஏற்பட்டதும் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். எழுதிய கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். ஆனால், ஒன்று கூட பிரசுரமாகாமலே திரும்பி வந்து கொண்டிருந்தன. இதைக் கொண்டு அவர் மனம் தளர்ந்து விடவில்லை. கடைசியாக ஒருநாள் அவருக்கு நான்கு பவுன் செக் ஒன்று வந்தது. அத்துடன் ஒரு கடிதமும் வந்தது. அவர் எழுதிய ‘டைபூன்’ என்ற கதை ஸான் பிரான்ஸிஸ்கோ கால் என்ற பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் வெற்றி