பக்கம்:மருதநில மங்கை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை45


“விரிகதிர் மண்டிலம் வியல்விசும்பு ஊர்தரப்
புரிதலை தளைஅவிழ்ந்த பூஅங்கண் புணர்ந்துஆடி
வரிதுவண்டு வாய்சூழும் வளங்கெழு பொய்கையுள்,

துனிசிறந்து இழிதரும் கண்ணின்நீர் அறல்வார 5
இனிதுஅமர் காதலன் இறைஞ்சித் தன்அடி சேர்பு
நனிவிரைந்து அளித்தலின் நகுபவள் முகம்போலப்,
பனிஒருதிறம் வாரப் பாசடைத் தாமரைத்
தனிமலர் தளைவிடுஉல் தண்துறை நல்ஊர!

'ஒருநீ; பிறர்இல்லை அவன்பெண்டிர்' ஏனஉரைத்துத்
தேரொடும் தேற்றிய பாகன்வந் தீயான்கொல்? 10
ஓர்இல்தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்தபுண்

பாரித்துப் புணர்த்தலின், பரத்தைமை காணிய,
‘மடுத்துஅவன் புகுவழிமறையேன்’ என்று யாழோடும்
எடுத்துச் சூள்பலவுற்ற பாணன் வந்தீயான்கொல்?
அடுத்துத் தன்பொய் உண்டார்ப் புணர்ந்தநின் ‘எருத்தின் கண் 15

எடுத்துக்கொள்வது போலும் தொடிவடுக் காணிய,
தனந்தனை எனக்கேட்டுத், தவறுஒராது எமக்குநின்
குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்கொல்?
கணங்குழை நல்லவர் கதுப்பறல் அணைத்துஞ்சி

அணங்குபோல் கமழும்நின் அலர்மார்பு காணிய; 20
என்றுநின்,
தீராமுயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார்? நீ வருநாள்போல் அமைகுவம்யாம்; புக்கீமோ?
மாரிக்கு அவாவுற்றுப் பீள்வாடும் நெல்லிற்கு ஆங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/47&oldid=1129474" இலிருந்து மீள்விக்கப்பட்டது