பக்கம்:உத்தரகாண்டம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334   ✲   உத்தரகாண்டம்

உங்க மகன் இறந்த சேதி சொன்னப்ப நீங்கதா இறந்திட்டீங்களோன்னு குழம்பி ஃபோன் போட்டாங்களாம். ரெஸ்பான்ஸே இல்லைன்னாங்க...”

“நாங்க போனதுல, அந்த ஆன்டிக்கு ரொம்ப சந்தோசம். இப்ப நிசாகூட எங்க ப்ராஜக்ட் எதுலானும் ஆக்டிவா செயல்படுறேன்னிருக்கா. அவங்களுக்குப் பூவனூர் போகணும் ஆசை. தாத்தா, அங்கே அவங்க அத்தை அந்த காலத்து ஃப்ரிடம் ஃபைட்டராமே? டி.பி வந்து இறந்து போனாங்களாம்... ரொம்ப ‘டேர் டேவில்’னு சொன்னாங்க ட்வென்டீஸ்ல, வீட்டுக்குள்ள ஒரு தாழ்த்தப்பட்ட அரிசனப் பெண் குழந்தைய எல்லோருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாம கொண்டு வந்து வளர்த்தாளாம்... எங்க சம்பு அத்தைய நான் படத்துலதான் பார்த்திருக்கிறேன். எங்கம்மாவும் அவளும் ஒண்ணா சாப்பிட்டுப் படுத்து, படிச்சி... அந்த காலத்துல தாலுகாபீசு முன்ன போயி, ‘மகாத்மா காந்தி ஜே’ன்னு கத்தினாளாம்?”

பூஞ்சாரல் விசிறி அடிக்கிறது... “அநும்மா, கமலி மகளா நீ?...”

“ஏம் பாட்டி அழுறீங்க...?”

“ஒண்ணுமில்ல தாயி, அந்த தயிரியம், நேர்மை, துணிச்சல், எல்லாம் உங்களுக்கு வரும். வந்திருக்கு...”

“என்ன, எல்லாம் பேசிட்டிருக்கீங்க? வாங்க, வாங்க... சுடச்சுட சப்பாத்தி... சப்ஜி, ரெடி... வாங்க, வாங்க தாத்தா, பாட்டி, ஹேய்...”

காலித் கையில் இலைகளுடன் அழைக்கிறான். தலை எண்ணி இலை போடப் படுகிறது.

“எல்லாரும் உட்கார்ந்தால் எப்பிடி? ரொட்டி யார் பண்ணுவாங்க?”

“நாங்க பண்ணிப் போடுவோம். கரம், கரம்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/336&oldid=1050527" இலிருந்து மீள்விக்கப்பட்டது