பக்கம்:உத்தரகாண்டம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    323

படிச்சா. துபாய்க்குப் போயி, முஸ்லிமாயிட்டான்னு சொல்றாங்க. ஆனா அதெல்லாம் எங்களுக்குத் தெரியலம்மா. வசதிதா. படிச்சிட்ட பயங்க முன்னுக்கு வந்து வசதியாயிட்டாங்க. ஊத்தங்கரையில மேலத்தெரு பொண்ணு, அதும் இதோட பட்டணத்தில படிச்சிச்சாம். அவனக் கட்டுவேன்னு சொல்லிருக்கு. அவப்பா, பெரியப்பா, வியாபாரம், அது நொடிச்சிப் போச்சின்னாலும் வீம்பு. முறைப் பய்யனத்தான் கட்டணும்ன்னிருக்கா. அவ அம்பது சவரன் போடணும்னாளாம். இவுரு வூட்ட வாசல வித்து அவனக் கட்ட நிச்சியம் பண்ணியாச்சி. இவங்க ராவுக்கு ராவே புதுக்குடி போயி, காருல போனாங்கன்னாங்க. ஆளுவ பஸ்ஸில புகுந்து அழகாபுரி ஆளுங்க அஞ்சு பேர வெட்டிப்புட்டாங்க. பொண்ணையும் வெட்டிட்டானுவ...”

அவளுக்குக் கேட்க முடியவில்லை. வாயில் போட்ட கவளம் இறங்க மறுக்கிறது.

இப்பிடி ஒரு சாதிக் கொடுமையா இந்த ஊருல...?

“சாதி எதும் தெரியாமதா இருந்தம் அம்மா. சின்னச் “சாதி, நீ என்னடா?ன்னு வீம்புதான். அன்னிக்குப் படிப்பில்ல, வசதியில்ல. இப்பகூட வசதியில்லாம, பன ஓலக் குடிசயில இருக்குராங்க. தண்ணியில்ல, ஒழவில்ல, பொழப்பில்ல. எடுபட்டுப் போவுதுங்க. கட்டிடம் கட்ட கூலி வேலன்னு. வயசுப் பொண்ணுகள்ளாம் எங்கியோ போயி டவுனில பிழைக்கிதுங்க...தா, காவேரி ஏரிப் பாருங்க! சித்திர வையாசி, மாசி மார்கழி எல்லாம் ஒண்ணுபோலக் கெடக்கு அல்லாம் கச்சிதாம்மா இப்ப”ன்னு முடிக்கிறாள்.

“ஓங்கூட்டுக்காரரு என்ன வேலை செய்தாரு?”

“இஸ்கூல்ல வாத்தியாரு. எங்க மாமா, பெரிய வூட்டு மணியமா இருந்தாங்க. புதுக்குடிக்குப் போய் வருவாரு, பஸ்ல மாட்டிக்கிட்டாரு கேசொண்ணுமில்ல. வுட்டுட்டாங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/325&oldid=1050462" இலிருந்து மீள்விக்கப்பட்டது