பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 61 –

ஏரி முதலிய இடங்களில்தான் காணப்பெறும். பின் முதலியவற்றை குத்தித் தின்னுதற் கேற்ப இதனது வாய் அலகுகள் நீண்டு கூரியதாக இருக்கின்றன. வடிவம் பெரிதாக உள்ளது. கால்கள் மிக நீண்டு வளர்ந்திருக்கும். இதனது சிறகின் இடையே கானும் செந்நிறமான தூவிக்கு முள்ளு முருங்கையின் மலரையும், இதன் காலுக்குத் தினைத்தாளையும் உவமை கூறுவர்.

நாரை வீரர் வரிசை

நெய்த்தலைக் கொழுமீன் உண்ணுவதற்காக நெடுந்தொலைவில் நாரையின் கூட்டமொன்று வரிசையாக வெண்மணல் மேட்டில் தங்கியிருக்கும் காட்சியினை அரசனுடைய காலாட்படை பகைவர்பாற் பெரும் வெற்றியைக் கருதித் தங்கியிருத்தல் போன்றுள்ளது என்று புலவரொருவர் நற்றிணையில் கூறியிருப்பது இங்கு குறிப்பிடதக்க தொன்றாகும்.

பறவைகளையே பாடிய பாக்கள்

சில புலவர்கள் பறவைகளேயே பாடி அவற்றீன் வாழ்வை அப்படியே காட்டுகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாகப் பிசிராந்தையார் பாடிய பாட்டினைக் கூறலாம். இப்புலவர் தம் நண்பன் கோப்பெருஞ்சோழனின் நட்பின் பெருமையினைக் கூற அன்னத்தினை விளித்து, " நீ குமரிக் கடலில் மீனை உண்டு பின் இமயம் நோக்கிச் செல்வாயாயின் இடையிலுள்ள சோழநாட்டினிடத்துத் தங்கி எனது நண்பன் கிள்ளி கேட்கும்படி எனது. பெயரினைக் கூறின் நினது இன்புறும்பேடை பூண, அணிகலன்கள் பல அளிப்பான் " என்று பாடுகின்றார். அப்பாடல் பின்வருமாறு: