பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
— 50 —

மகன்றில்

அன்றிலைப் போன்றே நீர் வாழ் பறவைகளுள் ஒன்றான மகன்றில் என்ற இனத்தில் ஆணும் பெண்ணும் பிரிவின்றி எப்பொழுதும் ஒன்றுபட்டுப் பிணைந்து வாழும். இது கருதியே தமிழ்ப் புலவர்கள், தலைவனும் தலைவியும் பிரிவின்றி ஒன்றி இருப்பதற்கு மகன்றிற் சேர்க்கையை உவமை கூறுவர். ஒருசிலர் மகன்றிலும் அன்றிலும் ஒன்றே என்று கருதுகின்றனர். வேறுசிலர் அன்றில் பறவையின் ஆண் இனமே மகன்றில் என எண்ணுகின்றனர். ஆனால் மகன்றிலும் அன்றிலும் வெவ்வேறு பறவைகள் என்றே கூற வேண்டும். இவ்வுண்மையினைப் பின்வரும் செய்யுள்வரிகளால் நன்கு அறியலாகும்.

“. . . . . . . . . . . . . . . . . . . . ஈர் குரல்
அன்றிற்கு ஒழிய மகன்றிற்கே யார்க்குமிம்
முன்றில் பனையும் எனமொழியும்."

(இ. சோ. உலா.)

மகன்றில் குறுகிய கால்களை உடையது. எப்பொழுதும் தன் பெடையுடன் இது பூவின்மீது வதியும். அவ்வாறு இருக்குங்கால் இடையில் சிறு பூ தடுப்பினும் சேவல் மிகவும் வருந்திப் புலம்பும்.

பாடும் குயில்

கரியதும் மின்னும் தூவியை உடையதுமான குயில் பொதுவாக வெயில் நுழைய முடியாத பொதும்பரிலுள்ள மாமரத்தில் வாழ விரும்பும் ; புகையை வெறுக்கும். புகையைக் கண்ட மாத்திரத்து தன் பெடையோடு தன் கூட்டினை நீங்கி வேறிடத்திற்குச் சென்றுவிடும். இளவேனிலில் இது மாம்பூவின் தாதினை அளைந்து மகிழும். இதனுல் தாது இதன்மேற் படிந்து பொன்னை உரைக்கும்