பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖి தொல்காப்பியம் பொருளதிகாரம்

"அலங்கடை என அம்சாரியை பெற்றது. அல் கடை-அல்லா . விடத்து, குரா முதலிய அ. றிணைப்பொருள்களைத் தம் அன்புக் குரிய உறவுமுறையுடையனவாகக் கொண்டு தம் துன்பத்தை அவ்வஃறினைப்பொளுக்கு எடுத்துக்கூறிச் செவிலி முதலியோர் கூறுங் கூற்றினைப் 'பால்கெழு கிளவிக்கு” எடுத்துக்காட்டாக இளம்பூரணர் காட்டியுள்ளமை இச்சூத்திரப்பொருளைத் தெளிவு படுத்துவதாகும்.

இனி, 'நட்பினடக்கயாங்கை லங்கடையே’ என்பதற்கு 'தம்முள் அன்புடையராய்ப்பழகும் மகிழ்ச்சிநிலையல்லாத துன்பக் காலத்து.’’ எனக கொண்டு 'மேற்கூறியவாறு அறிவும் புலனும் வேறுபட நிரீஇக் கூறும் பார் கிளவியெனப்படும் ஒரு கூற்றுச் சொல் தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய பெண்பாலார் நால்வர்க் கும் உரியதாகும்.’’ என இச் சூத்திரத்திற்குப் பொருள் கூறுதற்கும் இடமுண்டு.

'நட்பின டக்கையாங்கலக கடையே என வரும் இச் சூததிரத் தின் இரண்டாமடியினைத் தனிச் சூததிர மாகப் பிரித்து நச்சினார்க கினியர் வரைந்துள்ள உரைப்பகுதிகள் முன்னொடு பின் முரண்படு வனவாய்த்தொல்காப்பியச் சூத்திரக் கட்டமைப்புக்குப் பொருந் தாமையின் இளம்பூரணர் கொண்ட வண்ணம் இவ்விரண்டடிக ளையும் ஒரு சூத்திரமாகக் கொள்ளுதலே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏரபுடைய தாமென் க.

சு. உயிரும் நாணும் மடனும் என்றிவை

செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய.

இளம்பூரணப் :

. என்-எனின். மேற்சொல்லப்பட்ட நால்வர்க்கு முரியதோர்

பொருண்மையுணர்த்திற்று.

(இ-ஸ்.) உயிரும் தானும் மடப்பமும் என்று சொல்லப் பட்டவை குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய தலைமகட்கும் தோழிக்கும் நற்றாய்க்கும் செவிலிக்கும் உரிய என்றவாறு.

1. உயிர், என்றது, உயிரோரன்ன செயிர் தீர் நட்பினை. தலைவிதோழி கற்றாய் செவிலி இவர்கள் கால்வரும் ஒருவரை யொருவர் இன்றியமையாதவராய் ஓருயிர்போல்வர் என்பதாம்.