பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா உ.அ 欧感

அமர்ந்து வரூஉம். மக்களுந் தேவரும் நரகரும் மாவும் புள்ளும் முதலிய எல்லாவுயிர்களுக்கும் மனத்தின் கண்ணே பொருந்தித் தொழிற்பட வருமாயினும்; மேவற்றாகும்-ஆணும் பெண்ணுமென அடுக்கிக் கூறலுடைத்தாய் நுகர்ச்சி நிகழும் (எ று )

மேவற்றாகு மென்றார்: என்பது ஆணும் பெண்ணுமாய்ப் போக நுகர்ந்து வருதலின் ஒருவனும் ஒருத்தியுமே இன்ப நுகர்ந் தாரெனப்படாது அவ்வின்பம் எல்லா வுயிர்க்கும் பொதுவென் பதுரஉம் அவை இருபாலாய்ப் புணர்ச்சி நிகழ்த்துமென்பது உங் கூறியதாயிற்று. அறனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்துவருமென்றாராயிற்று.” (உக)

ஆய்வுரை :

இது, மேல் இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன் பொடு புணர்ந்த ஐந் திணை மருங்கிற்காமக் கூட்டம்’ என்புழி, இன்பம் எனப்பட்டது. இதுவெனவுணர்த்துகின்றது.

(இ - ள்) இன்பம் என்று கூறப்படும் உணர்வுதான் எல்லா வுயிர்க்கும் விருப்பத்தின் விளைவாக ஒருவரையொருவர் இன்றி யமையாதவராய் அன்பினாற் பொருந்தி மனத்தால் வெளிப்படத தோன்றிவரும் பொதுவியல்பின தாயினும் ஆணும் பெண்ணுமாய் நுகரப்பெறும் சிறப்பியல்பினையுடையதாகும். எ-று

எனவே, அன்பினைந்திணை யொழுகலாற்றில் இன்பம் எனப் படுவது தான் எல்லா வுயிர்க்கும் பொதுப்படவுரிய புலனுகர்ச்சி யாகிய இன்பம் என்ற அளவிலமையாது மக்கட்குலத்தார் ஆணும் பெண்ணுமாய்த் தம்மிற் கூடி அளவளாவும் நிலைமைக்கண் அவர் தம் மனனுணர்வின்கண் அன்பின்வழித்தோன்றும் காதலின்ப நுகர்ச்சியே ஈண்டு இன்பம் எனச் சிறப்பித்துரைக்கப்படும் என்ப தும் தெளியப்படும். அமர்தல் - அன்பென்னும் உயிர்ப்பண்பு காரணமாக ஆண் பெண் இருபாலாரும் ஒரு வரை யொருவர் இன்றி

1. மேவல்-ஆணும்பெண்ணுமாய்ப் பொருந்திப்போகம் நுகர்தல். மேவற்று பொருந்திப் போகம் நுகர்தலையுடையது.

2. அறமுதலாகிய மும் முதற்பொருள்களுள் இன்பம் என்பது எல்லாவுயிர்க்கும் பொது எனவே அறமும் பொருளும் ஆகிய இரண்டும் எல்லா வுயிர் க்கும் பொது வாகாது மக்கட் குலத்தார்க்கே சிறந்து வரும் உறுதிப்பொருள்களாம் என்பது கருத்து.