பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-9* தொல்காப்பியம் பொருளதிகாரம

கொடுப்ப மற்றையோர்பாற் செல்லாதனவுமாய், உழவு முதலிய தொழில் முயற்சியால் வாராதனவுமாய், வேறுபட்டுப் பிறரால் வலிந்துகொள்ளப்படாதனவுமாய் வரும் பொருளுரிமைமுறை (உல கியலிற் பொருந்துவன) அல்லவாயினும் (இவ்வகப்பொருளொழுக லாற்றிற்) பொருந்திவருவன வுள எ - று.

வீற்றுக்கொள்ளப்படுதல் என்பதற்கு, ஒருவரிடம் உள்ள பொருளை விலைகொடுத்துத் தனக்குரிமையுடையதாக அவரினின் றும் வேறுபடுத்திக் கொள்ளுதல் எனப் பொருள் கூறினும் அமை պմի. உக.அ. ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும் வருவகை தாமே வழக்கென மொழிப.

Namt 1 kgsmith :

என்-எனின். இதுவு மொருசார் பொருள் கொளுந்திறன் உணர்த்துதல் நுதலிற்று

(இ - ள்.) ஒருபக்கத்துக் கூறிய பொருண்மை ஒழிந்த பக்கத்துக் கண்ணும் வருவகைதாம் வழக்கு நெறி என்றவாறு.

மனையோள் மாட்டுங்-காமக்கிழத்தி மாட்டும் நிகழும் புணர்ச்சியும் பிரிவும் ஊடலும் பரத்தையர் மாட்டு நிகழும்.' அது வருமாறு :

'அன்னை கடுஞ்சொல் அறியாதாள்’’ (கலி.க.எ) என்னுங் கலியுள்,

1. இக்நூற்பாவில் இடம்பெற்றுள்ள 'பால்’ என்பதனைப் பக்கம்' எனவும், "கிளவி என்பதனைப் பொருண்மை’ எனவும் கொண்டார் இளம் பூரணர். ஒரு பால்-ஒருபக்கம். ஏனைப்பால்-ஒழிந்த பக்கம். தலைவனுடன் அளவளாவுங் திறத் தினராகிய மனைவி காமக்கிழத்தி என்போர்க்குக் கூறப்பட்ட புணர்ச்சி பிரிவு ஊடல் முதலிய பொருண்மை தலைவன் பால் தொடர்புடைய பரத்தையாரிடத்தும் கிகழும் என்பது இச்சூத்திரத்திற்கு இளம் பூரணர் கொண்ட பொருளாகும். பரத்தை லர் தலைவனொடு கடல் கொண்டமைக்கு கற்றிணை ள-ஆம் பாடல் இளம் பூரணருரையில் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது. 'பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப விறலிக்கு உடம்படச் சொல்லியது" என்னுக் துறையிலமைந்த கற்றிணைப் பாடலாகிய இதன் கண் பரத்தை தலைவனை மனைவிக்கு அஞ்சி னாள் என்று கூறி எள்ளி ககுவதாக அமைந்த குறிப்பன்றி இளம்பூரணர் கூறு மாறு தலைவனொடு பரத்தையூடிய குறிப்பு இடம் பெறாமை சிக்திக்கத் தகுவ

انتزینگ ک