பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பா . క్షః

இது மறுத்துரைப்பதுபோல் உவகைபற்றிக் கூறியது.

"அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே நீயெமக் கா கா தது.” (குறள், ! 29 இஃது, இளிவரல் பற்றி மறுத்துக் கூறியது. ஏனைய வத்துழிக் காண்க. இவை நெஞ்சினைத் தலைவி பெண்பாலாகக் கூறியன. இவை துன்பமும் இன்பமும் நிலைக்களமாகக் காமங் கண்ணிய மரபிடை தெரிய வந்தன.

'கானலுங் கழறாது ...அலவ.' 'அகம் }ே இது சொல்லா மரபின சொல்லுவனவாக அழுகைபற்றிக் கூறியது. இவை உயர்திணையுமாயிற்று.

"கொங்குதேர் வாழ்க்கை............ (குறுந் 2)

என்பது உவகைபற்றிக் கூறியது.

"போர்தொலைந் திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போல் ஆரஞ ருற்றாரை யணங்கிய வந்தாயோ...' (கலி. 120)

இது, செய்கையில்லாத மாலைப்பொழுதினைச் செய்யா மரபில் தொழிற்படுத்தடக்கி உவமவாயிற்படுத்தது.

"தொல்லுழி தடுமாறி' (கலி, 129) என்பதனுள்,

"பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப்...... இனியசெய் தகன்றாரை யுடையையோ நீ ; (கலி. 129)

எனக் கடலும் அன்றிலுங் குழலும் உற்ற பிணியைத் தம் பிணிக்கு வருந்தினவாகச் சேர்த்தி உயர்திணையாக்கி உவமவாயிற்படுத்த வாறு காண்க.

'ஒன்றிடத் தென்றார்; வேண்டியவாறு உவ மங்கோட லாகா தென்றற்கு பகுதியைப் பால்கெழு கிளவி (தொல், பொ. 5) என மேலும் ஆளுப. காமங்கண்ணிய" என்றதனாற் கைக்கிளையும் பெருந்திணையுமாகிய காமத்திற்கு வருவனவுங் கொள்க.

'சென்றதுகொல் போந்ததுகொல்' (முத்தொள்.)

இது கைக்கிளைக்கண் உறுப்புடையதுபோல் அவலம்பற்றி நெஞ்சினைக் கூறிய க