பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல நூற்பா நீங் 敬軍受品

எனவும், சாயல், நாண் , மடன் என வும், நோய், வேட்கை நுகர்வு எனவும், இவ்வாறு அவ்வவ்விடங்களிற பேசப்பட்டு வருளுசொற்களெல்லாம் நாட்டினகண் உணர்ந்து கூறுவாரும் கேட்டுனர்வாரும் ஆக வழங்குகின்ற வழக்கியல் முறைமையினா லே இப்பொருளகளை மனத்தினால் உணர்ந்து கொள்வதல்லது மாணாக்கர்க்கு இச்சொல்லாற்குறித்த பொருள் இது என்று ஐம்பொறி வாயிலாகக் கண்டுணரும்படி காட்ட வொண்ணாத அருவப்பொருள்களையுணர்ததுவன என்பர் ஆசிரியர் எ-று.

"ஆவயின் வரு உங் கிளவி யெல்லாம்' என்றதனால் இவ்வாறு வருவன மேலும் பலவுள என ஆசிரியர் குறித்த லால் அன்பு, அறிவு, அழுக் காறு, பொறை நிறை என்பனவும் இவை போல்வனவும் காட்டலாகாப் பொருளவாதல் கொள்க.

உசச. இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

அவையில் காலம் இன்மை யான.

இளம் பூரணம :

என்- எனின் இதுவும் மேற்கூறப்பட்ட பொருள், பொருள் என்பது அறிவித்தலை நுதலிற்று."

( இ- ள்.) தேவருலகத்தினுங் கடல்சூழ்ந்த வுலகத்தினும் மேற்சொல்லப்பட்ட பொருளில்லாத காலம் இன்மை பான் உள் பொருளென்றே கொள்ளப்படும் என்றவாறு, (திக) நச்சினார்க்கினியம் :

இஃது, இவையுங் காட்டலாகாப் பொருள்கள் ஆசிரியனா. ணையாற் கொண்டன அல்லவற்றைப் பொருளெனக் கொள்க என்கின்றது. ”

1. மேலே கூறப்பட்ட ஒப்பு முதலாயின பொறிகட்குப் புலனாக இன்ன. வுருவின எனக்காட்டலா காப் பொருளவாயினும் என்றும் பாண்டும் a... ៩ ” பொருள்களே என்பதனை அறிவிப்பது இச்சூத்திரம் என்பதாம்.

2. இஃது இவையும் ஆசிரியன் ஆணையாற் கொண்டன அல்ல.இவற்றைப் பொருளெனக் கொள்க என்கின்றது" என இக்கருத்துரைப் பகுதியிருத்தல் வேண்டும்.

மேல் ஒப்பு முதலான நுகர்வு ஈறாகச் சொல்லப்பட்டனவற்றைக் காட்ட லா காப்பொருள் எனவே அவை உண்மையல்லாத இல்பொருளே என ஐயுற்று வினவிய மாணாக்கர் க்கு இன்னோரன்னவை இல்லாதன அல்ல என்றும் பாண்டும் உள்ளனவே என ஐயமகற்றும் கிலையில் அமைந்தது இச்சூத்திரமாகும்.