பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா சக. 臀依剑

(இ. ஸ் ) உயர்த்து ச் சொல்லுதற்குரிய கிளவி தலைமகற் குந் தலைமகட்கும் ஒத்தகிளவி, ஐயக்கிளவி, தலைமகற்கே உரித் தென்றவாறு."

தலைவிமாட்டு ஜயக்கிளவி யின் றென்றவாறாம். அதனாற் குற்ற மென்னையெனின், தெய்வமென்று ஐயுறுங்கால் அதனை முன்பு கண்டறிவாளாதல் வேண்டும் காணாமையின் ஐயமிலள் என்க. இனி உயர்த்துச் சொல்லுதல் உளவாம்.

'அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன்

மகனே தோழி யென்றனள். (அகம். சஅ)

என்பது உயர்த்துச் சொல்லியவாறு ,

தலைவன் உயர்த்துச் சொல்லியதற்குச் செய்யுள் :

  • மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி. ' (குறள் ககக.அ)

பிறவு மன்ன. ஐயக்கிளவி களவியலுட் கூறப்பட்டது. (சங்)

நச்சினார்க்கினியம் :

இது, தோழிக்குந் தலைவிக்குமுரியதோர் வழுவமைக் கின்றது.

1. ‘உறழ்தல்' என்னுஞ்சொல் 'ஒத்தல்' என்ற பொருளில் இங்கு ஆளப் பெற்றதெனக் கொள்வர் இளம்பூரணர். ஈண்டு ஒத்தலாவது தலைவனுக்கும் தலைவிக்கும் ஒப்பவுரியதாதல்,

2. தல்ைவி ஐயுறுமிடத்துத் தெய்வமோ? என்று ஐயுறுதல் வேண்டும். அங்கனம் அணங்கு (தெய்வம்) என்று ஜபுற்றல் அவளது உள்ளத்தே அச்ச வுணர்வு தோன்றுமல்லது காமவுணர்வு தோன்றாது ஆகவே ஐயக்கிளவி ஆடுவிற்குரித்து' என்றார் ஆசிரியர்.

3. தம்மாற் காணப்பட்டதொரு பொருளை அதுவோ இதுவோ என ஐயுறுவோர் தமது ஐயத்திற்கு இலக்காகிய பொருள்களையெல்லாம் முன்னமே கண்டிருத்தல் வேண்டுமென்னும் கியதியில்லை. தாம் ஐயுற்ற பொருள்களுள் ஏதேனும் ஒன்று தம்மால் முன்னன்ே காணப்பட்ட பொருளாகவும் அதனை யொத்துத் தோன்றும் ஏனையது அறிந்தார் சொல்லக் கேள்வியுற்ற பொருளா. கவும் அமைதல் இயல்பு. எனவே தலைவி தெய்வமென்று ஐயுறுங்கசல் அதனை முன்பு கண்டறிவாளாதல் வேண்டும் எனவரும் இளம்பூரணர் கூற்று அத்துணைப் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை.