பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்ப கங் gr F

'அரிபெய் சிலம் பின்' (அகம், 6)

என்பதனுள் ஏந்தெழில் ஆகத்துப் பூந்தார் குழைய' என்பது தலைவி புலவிக்கட் புகழ்ந்தது.

நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு' (அகம். 66) என்பதும் அது.

'தகை' எனப் பொதுவாகக் கூறலிற் குணத்தைக் கூறலுங் கொள்க.

'நாலாறுமாறாய்' (நாலடி. 383) எனவும், * நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்' (நற். 1)

எனவும் வரும்.

குற்றேவனிலையளாகிய தலைவியைத் தலைவன் புகழ்தலா லும் பொருநாணினளாகிய தலைவி கணவனைப் பிறரெதிர் புகழ் தலானும் வழுவாயிற்று. (க.ச)

ஆய்வுரை :

இது, கற்புக் காலத்துத் தலைவனுக்குரியதோர் மரபு கூறு கின்றது.

(இ - ள்) நிகழாநின்ற அழகின் பக்கத்தே வேட்கை மிகுதி யால் தலைவன் தலைமகளைப் புகழுந் திறத்தினைக் கற்பினுள் நீக்காது ஏற்றுக்கொள்வர் அறிஞர். எ-று

தகை நிகழ மருங்கு - அழகுநிகழும் பக்கம் , இஃதாவது தலைமகள் பால் மனைவாழ்க்கையில் அழகிய பண்பும் செயலும் வெளிப்பட்டுத் தோன்றும் நிலை. வேட்கை மிகுதியாவது தலை மகளுடைய அழகிய பண்பும் செயலுங்காரணமாகத் தலைவ னுள்ளத்தே மிக் குத்தோ ன்றும் வேட்கைப்பெருக்கம். மிகுதியின்மிகுதியால். இன் ஏதுப்பொருளில் வந்தது, தலைமகளது நற்குண நற்செய்கைகளாகிய அழகில் திளைத்த தலைமகன் தலைவி யிடத்தே வைத்த பெருவேட்கை காரணமாகத் தலைமகளைப் புகழ்ந்துபாராட்டுதலும் மனை வாழ்க்கைக்கு அழகுதருவதே என் பார் புகழ்தகை’ என்றார் ஆசிரியர். தகை - அழகு. காதற் கேண்மையால் ஒருயிர் எனப் பழகுங்கேண்மையுடையாராகிய