பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


ஆழம் கணக்கிடப்படாத கடல் போன்று அன்பின் வலி என் வாழ்வைச் சுற்றி இன்னிசை பொழிகிறது. மலர்ந்திருக்கும் சோலைகளில் பாட்டிசைக்குப் பறவைகள் போல் அன்பின் மகிழ்ச்சி இன்னிசை எழுப்புகிறது.

-ப.ப

இருட்டிலிருந்தும் ஒளியிலிருந்தும் வானம் தன் சொற்களைத் தேடுகின்றதே, அதே போல் தனது ஒலிகளிலிருந்தும் அமைதியிலிருந்தும் மனம் தன் சொற்களைத் தேடுகிறது.

-மின்

நீயே வானம், நீயே கூடு----

-கீ

முழுமையான அமைதியில் நெஞ்சத்தை நிலைக்கச் செய்யும் அன்பை எனக்கு அனுப்பிவைத்திடுவாய்.

-க.கொ

கண்ணுக்குப் புலப்படாத இருட்டு அவனது புல்லாங் குழலை இசைக்கிறது. ஒளியின் தாளம் விண்மீன்களாகவும், எண்ணங்களாகவும், கனவுகளாகவும் வடிவு எடுக்கின்றன.

-மின்

தங்களுடைய தீபங்களை அவை தாங்களே ஏற்றிக் கொள்கின்றன. தங்களுடைய ஆலயங்களில் தங்களுடைய மொழியிலேயே இசைக்கின்றன.