பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

గ్దశ தொல் காப்பியம் - பொருளதிகாரம்

இதன் கட் சொல்வழுவன்றிச் செய்யா மரபிற் றொழிற் படுத்து அடக்கலும் அமைத்தார். இன்னும் உய்த்துக்கொண் டுணர்த (656) லென் பதனான்’ உண்ணப்படுதற்குரிய அல்லாத பொருளதனைப் பிறர் உண்ணப்பட்டதுபோலக் கூறலும் மரபா மென்பது பொருளாகக் கொள்க. அவை,

  • தோள் தவ முண்டு துறக்கப் பட்டேர்ர் வேள்நீர் உண்ட குடையோ ரன்னர்; நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோர் அல்குநர் போகிய ஆரோ ரன்னர்; கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர் சூடின ரிட்ட பூவோ ரன்னர்’ ‘ණීථී. 23X

என வரும். பிறவுங் கொள்க.

SAASA SAAMMALLL ATSAAAASAASLL

t, உண்ணுதற்றொழில் நிகழ்த்து தற்கு உரியனல்லாத பொருளை உண்ணு தற்றொழிலை நிகழ்த்து தற்குரிய வினை முதலாகக் கூறுதலும் மரபு எனக்கூறும் இக் நூற்பாவில் உண்ணுதற்றொழிலல்லாதவற்றை உண்ணுதல்' என்ற சொல்லாற் குறிப்பிடும் சொல்வழுவும், செய்தற்றொழில் கிகழ்த்தாத பொருளை அத்தொழில் விகழ்த்தின வாகக் கூறும் பொருள் வழுவும் ஒருங்கு அமைக்கப்பட்டன என்பதாம்.

2. உய்த்துக்கொண்டுணர்தலாவது, ஒருதொடர் க்கு ஒருபொருள் சொல் வியக்கால் அதன் கண்ணே மற்றொரு பொருளை யும் உய்த்துணர்ந்து கொண்டு அறியுமாறு தோன்றச் செய்தலாகும். இந்நூற்பாவில், 'உண்டற்குரிய அல்லாப் பொருள்' என்றது உண்ணுதற்றொழிலை நிகழ்த் துதற்கு உரியவல்லாத பொருளை: எனவும், உண்டன போலக்கூறல்" என்றது "உண்ணுதற் றொழிலை கிகழ்த்தின ఢిu రఊ கடனுதலை’ எனவும் வினை முதற்பொருளுக்குரியதாகப் பொருள் கூறி, "உண்ணப்படுதற்குரியவல்லாத பொருளைப் பிறரால் உண்ணப்பட்டது போலக் கூறலும் மரபாம்' எனச் செயப்படுபொருளுக்குரியதாக கற்றொரு பொருளும் உய்த் துணர்ந்து கூறும் நிலையில் இந் நூற்பா அமைந்திருத்தலால் இஃது உய்த்துக்கொண்டுணர்தல் என்னும் உத்தியாவிற்று. -

  • பசலையால் உணப்பட்டு என் புழி உண்ணுதற்றொழிலைச் செய்யாத பசனை என்னும் நிறம், தலைவியின் கலத்தைபுண் ணுதற்நொழிலை நிகழ்த்திய வினை முதலாகக் கூறப்பட்டுள்ளமையும்,

தோள்கலம் உண்டு என் புழித் தலைவனால் உண்ணப்படுதற்குசிய செயப்படு பொருளல்லாத தலைவியது தோளின் கலம் தலைவனால் உண்ணப்பட்ட செயப்படு பொருளாகக் கூறப்பட்டுள் ன மையும் காண்க.

3. உண்டன போலக் கூறலும் என்ற உம்மையால் உண்ணுதற்றொழினே

அன்றிச் செல்லுதல் முதலிய பிற தொழில்களை கிகழ்த்தின வாகக் கூறுதலும் மரபாதன் கொள்க : ண் பதாம்,