பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ: ; தொல்காப்பியம்-பொருளதிகாரம்

துஞ்சா முழவின் மூதூர் வாயில் உண்டுறை நிறுத்துப் பெயர்ந்தனன் அதற்கொண் டன்றை அன்ன விருப்போ டென்றும் இரவரன் மாலைய னேவரு தோறுங் காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினும் நீதுயில் எழினும் நிலவு வெளிப் படினும் வேய்புரை மென்தோள் இன்றுயில் என்றும் பெறாஅன் பெயரினும் முனிய லுறாஅன் இளமையின் இகந்தன றும் இலனே வளமையில் தன் நிலை திரிந்தன்றும் இலனே'

குறிஞ்சிப் பாட்டு, 231-245)

"கன் மழை பொழிந்த அகன்கண் அருவி

ஆடுகழை அடுக்கத் திழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாளி வண் மயங்கிதழ் மழைக்கண் கலுழும் அன்னாய்’ (ஐங்குறு. 220)

என வருவன உண்மைசெப்பல்.

காமர் கடும்புனல்" (கலி 39) என்பதனுள் இரண்டு வந்தன பிறவுமன்ன. (சங்)

ஆய்வுரை :

இது தோழி செவிலிக்கு அரத்தொடு நிற்குமாறு உணர்த்து கின்றது.

(இ-ள்) எளித்தல், ஏ-த்தல், வேட்கையுரைதல், கூறுதல் உசாதல், ஏ-தீடு, தலைப்பாடு, உண்மை செப்புங்கிளவி யொடு

சேர்த்து அறத் தொடு நிற்றற் பகுதி எழுவகைப்படும். எ-று.

செவிலிக்குத் தோழி அறத் தொடுதிற்குங்கால், தன்னிகரற்ற தலைவன் இளையோராகிய எங்களிடத்து மிகவும் எளியனாக நடந்துகொண்டான் எனக் கூறுதலும், இத்தகைய அருளும் சிறப் பும் உடையான் அத்தோன்றல் எனத் தலைவனை உயர்த்துப் புகழ்தலும். தலைவன் தலைவியிருவரும் ஒருவரொருவர்பால் அன்பினால் நிரம்பிய வேட்கையுடையார் எனக் கூறுதலும், அத்