பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன தொல்காப்பியம் பொருளதிகாரம்

பொருளுரைப்பச் சேர்ந்தவாறும் இசைதிரித்து இசைத்தவாறும் அவை தத்தம் நிலையிற் குலையாமை நின்று பொருள் பட்ட வாதுங் கண்டு கொள்க.

'ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.” (குறள். சுசு உ)

இதுவும் இரண்டென்னுந் தொகைக்கு 'ஊறொராமை’ எனப் பொருள் உரைக்க வேண்டும். (க)

நச்சினார்க்கினியம் :

இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையிற் பொருளியலென்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஒத்து க்களும் பொரு ளெதிலக்கணமன்றே உணர்த்தின. இதற்கிது பெயராயவாறென்னை யெனின்: சொல்லதிகாரத்திற் கூறிய சொற்களை மரபியலின் இருதிணை ஐம்பா லியனெறி வழாமைத் திரிபில் சொல் லென்ப ராதலின் அவை ஈண்டுத் தம் பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாமெனவும், இப் பொருளதிகாரத்து முன்னர்க்கூறிய பொருள்களிற் பிறழ்ந்திசைப்பனவும்பொருளாமெனவும் அமைத்துச் சொல்லுணர்த்தும் பொருளுந் தொடர்மொழி யுணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலிற் பொருளியலென்றார். இச் சூத்திரம் இவ்வோக்தின் கண் அமைக்கின்ற வழுவமைதிகளெல்லாஞ் சொற் பொருளின் வழுவமைதியும் பொருளின் வழு வமைதியுமென இரு

1. அவ்வாய்பாட்டாற் போந்த பொருளாவது, சொற்றொடர்களின் தொட ர்மைப்பிலன்றி அத்தொடர்ப்பொருள்களிலிருந்து கருத்துவகையாற் கிடைத்த தொகைப் பொருளாகும்.

2. அவை என்பதனை 'அசை எனத் திருத்திப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

3. இருதிணை ஐம்பால் இயல்கெறி வழுவாவண்ணம் சொல்லதிகாரத்திற் கூறப்பட்ட திரிபில்லாத சொற்கள் இப்பொருளதிகாரத்தில் தம்பொருளை வேறு பட்டிசைப்பினும் பொருளாக அமைத்துக்கொள்ளப்படுமெனவும், இப்பொருளதி காரத்தில் முன்னர்க் கூறப்பட்ட பொருள்கள் வேறுபட்டிசைப்பினும் பொருளாக அமைத்துக்கொள்ளப்படும் எனவும் தனிச் சொற்பொருளும் தொடர்மொழிப்பொரு ரூம் ஒருங்கே கூறலின் இவ்வியல் பொருளியல் என்னும் பெயருடையதாயிற்று என்பது இவ்வியலின் பொருளமைதி குறித்து கச்சினார்க்கினியர் தரும் விளக்க

ாகும்,