பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா திஉ tre;6,

ஏர் என்பது-தளிரின்கண் தோன்றுவதோர் பொலிவு போல எல்லா வுறுப்பினும் ஒப்பக்கிடந்து கண்டார்க் கின்பத்தைத் தருவ தோர் நிறவேறுபாடு. அது எல்லா வண்ணத்திற்கும் பொது வாகலின் வண்ணம் அன்றாயிற்று. இது வண்ணம் பற்றி வரும். "இவன் ஏருடையன்’ என்றால் அதுவும் மனங்கொளக் கிடந்தது.

எழில் என்பது-அழகு. அது மிக்குங் குறைந்தும் நீடியும் குறுகியும் நேர்தி உயர்ந்தும் மெலிதாகியும் வலிதாகியும் உள்ள உறுப்புக்கள் அவ்வளவிற் குறையாமல் அமைந்தவழி வருவதோர் அழகு. இதுவும், அழகியன்’ என்றவழி அழகினைப் பிரித்துக் காட்டல் ஆகாமையின் ஈண்டோ தப்பட்டது.

சாயல் என்பது-மென்மை. அது நாயும் பன்றியும் போலாது மயிலுங் குயிலும் போல்வதோர் தன்மை. அதுவும் காட்டலாகாமை யின் ஈண்டோ தப்பட்டது.

நாண் என்பது-பெரியோர் ஒழுக்கத்து மாறாயின செய் யாமைக்கு நிகழ்வதோர் நிகழ்ச்சி. அதுவும் காட்டலாகாது.

மடம் என்பது-பெண்டிர்க் குள்ளதோர் இயல்பு. அது உய்த் து ணர்ந்து நோக்காது கேட்டவாற்றாலுணரும் உணர்ச்சி. அதுவும் காட்டலாகாது.

நோய் என்பது-துன்பம். இவன் துன்பமுற்றான் என்றவழி அஃதெத் தன்மையது என்றார்க்குக் காட்டலாகாமையின் அதுவும் ஈண்டோ தப்பட்டது.

வேட்கை என்பது-யாதானும் ஒன்றைப் பெறல்வேண்டு மெனச் செல்லும் மன நிகழ்ச்சி. இவன் வேட்கையுடையான் என்ற வழி அஃது எத்தன்மை என்றார்க்குக் காட்டலாகாமையின் ஈண் டோதப்பட்டது.

ஆவயின் வரூஉங் கிளவியெல்லாம் என்ற தனான் அன்பு அழுக் காறு பொறை அறிவு என்பனவும் இவைபோல்வனவுங் கொள்க. இவையெல்லாம் அகத்திணை புறத்தினை இரண்டிற்கும் பொது. இவை காட்டலாகாப் பொருளவாயின் இல்பொருண்மேற் சொன் னிகழ்ந்த வென்றாலோ எனின், இது மேற்கூறப்பட்ட பொருள் பொருளென்பது அறிவித்தல். அவை உள் பொருள் என்பது வரு கின்ற சூத்திரத்தான் உரைப்ப. (இஉ}