பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

郡等°臀 தொல்காப்பியம - பொருளதிகாாம்

இளம்பூரணம் :

என்-எனின் உள்ளுறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

( இ-ள் ) உடனுறையும் உவமமும் சுட்டும் நகையும் சிறப் பும் எனக் கெடலரு மரபினை உடைய உள்ளுறை ஐந்துவகைப் படும் என்றவாறு .

உள்ளுறையாவது பிறிதொருபொருள் புலப்படுமாறு நிற்ப தொன்று. அது கருப்பொருள் பற்றிவருமென்பது அகத்திணையிய துள் ( அகத்திணை. நி0 ) கூறப்பட்டது.

உடனுறையாவது உடனுறைவ தொன்றைச் சொல்ல, அத னானே பிறிதொரு பொருள் விளங்குவது.

விளையா டாயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை யகைய நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப தும் மினுஞ் சிறந்தது நுல்வை யாகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே அம்ம நாணுதும் நும்மொடு நகையே விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த் துறைகெழு கொண்க.நீ நல்கின் நிறைபடு நீழற் பிறவுமா ருளவே.’’ (நற். களது.)

இதனுள் புன்னைக்கு நாணுதும்' எனவே, அவ்வழித்தான் வளர்த்த புன்னையென்றும். 'பல்காலும் அன்னை வருவள்’ என்று ட லுறைகூறி விளக்கியவாறு.” பிறவுமன்ன.

1. உள்ளுறையைக்தே' என உடனுறை முதலாகவுள்ள ஐந்தினையும் உள்ளுறையென்ற பெயரால் தொல்காப்பியனார் குறிப்பிடுதலால் உள்ளுறையாவது பிறிதொரு பொருள் புலப்படுமாறு நிற்பதொன்று' என ஐந்தற்கும் பொதுவாக விளக்கம் தந்தார் இளம்பூரணர்.

2. தன்னுடன் உறைவது ஒன்றைச் சொல்ல அதனாலே பிறிதொரு பொருள் குறிப்பாகப் புலப்படும்படி செய்தல் உடனுறையெனப்படும். நும்மினுஞ் சிறந்தது துல் வையாகும் என்று அன்னை கூறினள் புன்னையது கலனே எனத் தம்முடன் உறைவதாகிய புன்னையினைக் கூறியது பலகாலும் இங்கு அன்னை வருவாள் :

என்ற குறிப்புப்பொருளைத் தந்தமையின் உடனுறை' யென்னும் உள்ளுறையாயிற்று.