பக்கம்:நூறாசிரியம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

373

வீசியெறியப்படின் முளைக்காது; ஒரோவழி முளைத்திருந்தாலும் அது வேர்விடாது. எப்பொருணிடத்தும் முயற்சியின் அளவிற்கேற்பவே பயன்கிட்டும்; சிப்பியின் ஓடு உடைந்தவழி ஒளிவீசும் முத்துப் போல் தேடுதற்கு அரிய கல்விச் செல்வமே சிறந்தது; ஆதலினாலே சான்றோர் பெருமக்கள் அக்கல்விச் செல்வத்தைத் உள்ளத்தினுள் நிறைத்துக் கொண்டனர். கற்க, கற்க ஆராய்ந்து கற்க! குற்றமந்த ல்வத்தை அழியாமல் காத்தற்கு அதனைக் காப்புப் பெட்டகத்துள் இட்டுவைத்தல் போல இளைத்த காலத்து உதவும் போருளாகக் கல்வியை நெஞ்சகத்து இருத்திக் கொண்டனர். துன்பத்தினின்று தப்ப விரும்புவோர் மனம் தோய்ந்து கல்வியை கொய்துகொள்க! பிறர்க்கும் வழங்குக!

விரிப்பு

இப்பாடல் புறப் பொருள் சார்ந்தது.

ஒரு பொருளை விரும்புவோர் அஃது எத்துணைச் சேய்மையிலிருப்பினும் அருமுயற்சியார் பெற்றதாயினும் முயன்று கைக்கொள்வர். பொருளின் பயனறியாத சோம்பேறிகள் அரிய பொருள் அண்மையிலேயே இருப்பினும் அதனைக் கொள்ளார்; எளிய முயற்சியாற் செய்யப்பெறும் சிறந்த பயனைக் கொடாது; எப்பொருளிடத்தும் நாம் மேற்கொள்ளும் முயற்சிக்கேற்பவே பயனைப் பெறவியலும் தேடுதற்கு அரிய கல்வியாகிய செல்வயே சிறந்தது; ஆகையாலேயே சான்றோர் கல்வியை உள்ளத்தே பொதிந்து கொண்டனர்; ஈடேற விரும்புவோர் கல்வியை உளந்தோய்ந்து கற்க, பிறரையும் கற்பிக்க என்று உலக மக்களுக்கு அறிவுறுத்துவது இப்பாட்டு

வானத்து ஆயினும் ..... வானத்தே இருப்பதாயினும்

வான வெளியில் இயங்கும் பிறகோள்களிலோ செயற்கைக் கோள்களிலோ, ஊர்திகளிலே இருக்கும் பொருளாயினும் என்றவாறு.அன்றிக் கதிரவன் வெப்பமும், விண்கற்களும் , மழைமுகிலும் போல்வன எனினுமாம்.

குன்றத்து ஆயினும்-மலையின்கண் இருப்பதாயினும் மீன் அற்று இலங்கும் ஆழியது ஆயினும் மீன்கள் வாழுதல் இல்லாத கடலின் ஆழத்தே இருப்பதாயினும்

முயல்வின் கொண்மர் பொருள்வேட்டோரே - பொருளை விரும்பியோர் முயன்று கைக்கொள்வர்.

பயன் தெரிகு அல்லாப் பாடு இல் மாக்கள் - பொருளின் பயனை அறிய மாட்டாத முயற்சியற்ற மாக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/399&oldid=1234686" இலிருந்து மீள்விக்கப்பட்டது