பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் 15 2. மழையின் மாண்பு வான்மழை என்றும் நின்று உலகிற்கு வளங்களை வழங்கி வருதலால், அஃது அமிழ்தமென எண்ணத் தக்கது. 11 உண்போர்க்கு வலுவளிக்கும் உணவு விளைத்துத் தந்து, உண்டு கொண்டிருக்கும் அவர்க்குத் தானே நீருணவாகவும் உதவுவது மழை. 12 மழை பெய்யாது தவறுமாயின், பெரிய உலகை விரிந்த கடல் சூழ்ந்திருந்தும் பயனின்றி, பசி உள்ளே நிலைத்து நின்று வருத்தும். 13 மழை யென்னும் வருவாய் வளங்குன்றின், உணவு விளைக்கும் உழவர் ஏர் உழவியலாது. 14 ஒரு நேரம் பெய்யாது கெடுக்கினும், அதனால் வளங்கெட்டவர்க்கு ஈடு செய்ய மறுநேரம் பெய்து வாழ்வளிப்பதும் அம்மழையேதான்! 15 விண்ணிலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் தவிர, மற்றபடி தரையில் பச்சைப் புல்லின் தலையையுங் கூடக் காண முடியாது. 16 வானம் மின்னி யிடித்து மழை வழங்காதாயின், நீண்டு பரந்த கடலும் தன் வளங்குறையும். 17 மழை பெய்யாது வறண்டால், உலகில் தெய்வங்கட்கும் சிறப்பு விழாக்களும் நாள் வழிபாடுகளும் நடைபெறா. 18 இப்பெரிய உலகில் மழை பொழியாதாயின், கொடை, நோன்பு ஆகிய இரண்டுமே நிலைபெறா. 19 தண்ணீரின்றி உலகம் நடவாதெனில், தண்ணீரளிக்கும் மழையின்றி எவரிடத்தும் நல்லொழுக்கம் அமையாது. 20