பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 109 48. வலிமை அறிந்து நடத்தல் எடுத்துக் கொண்ட செயலின் வன்மையும் தன் வலிமை யும் பகைவனது வலிமையும் இருவர்க்கும் துணையா யினார் வலிமையும் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்படுக. 471 தன்னால் இயலக் கூடியது தொடர்பாக அறிய வேண்டியதை அறிந்து அந்நிலையில் பொருந்தி வினை மேற் செல்வார்க்குக் கைகூடாதது ஒன்று மில்லை. 472 தமக்கு உள்ள வலிமையை எடைபோட்டு அறியாமல் வெற்று ஊக்கத்தால் உந்தப்பட்டு வினை முடிக்க முடியாமற் நடுவிலே சிதைந்தவர் பலர். 473 ஆங்காங்கு உள்ள நிலைமைக்கு ஏற்ப அமைந்து ஒழுகாதவனாய், தன் வலிமையின் அளவையும் உணராதவனாய், தன்னை மிக உயர்வாக வியந்து கொண்டிருப்பவன் விரைவில் கெட்டு விடுவான். 474 மெல்லிய மயில் தோகை ஏற்றிய வண்டியும், தாங்கும் வலிமைக்கு மேல் மிகுதியாக அப்பண்டம் ஏற்றப்படின் அச்சு முறிந்து விடும். 475 மரத்தின் கிளை நுனி வரை ஏறிச் சென்றிருப்பவர் மேலும் அதைக் கடந்து ஏற ஊக்கங் கொண்டால் உயிருக்கு அழிவு ஏற்பட்டு விடும். 4.76 தம்பொருள் அளவும் கொடுக்கும் அளவும் அறிந்து முறையோடு பிறர்க்கு உதவுக, செல்வம் கெடாமல் காத்து நெடுநாளைக்கு உதவும் வழி அதுதான். 477 வருவாய் வரும் வழியின் அளவு சிறிதாயினும், செலவாகும் வழி அதனினும் விரியாதிருப்பின் தீங்கில்லை. 478 தன் வலிமையின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்வு, முதலில் வளர்வது போல் காட்டிப் பின் இல்லாமல் போய் மீண்டும் தோன்ற முடியாமல் கெட்டு விடும். 479 உள்ள செல்வத்தின் அளவை ஆராயாமல் செய்யும் ஒப்புரவுஉதவியால் செல்வ அளவு விரைவில் குறையும். 48 O