பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

205


ஒளியை நிழல் துரத்திச் செல்தும், கோடையைத் தொடர்ந்து மாரிவருவதுமான இந்தச் சாலை வழியே காத்திருப்பதே எனக்கு இன்பம். -கீ

இன்று எனது உயிர் ஏன் கிளர்ந்து துடிக்கிறது? எனது நெஞ்சத்தில் ஒரு பெருங்களிப்பின் மயக்கம் ஏன் பரவிக் கிடக்கிறது? என்று எனக்குத் தெரியவில்லையே! -கீ

காலை அமைதி இன்னிசைப் புட்களின் பண்ணோசை வெள்ளமெனப் பெருகுகின்றது. வண்ண மலர்கள் வழியில் பேருவகையாய்க் காட்சி அளிக்கின்றன. முகில் மண்டலத்தின் இடைவெளியில் தங்கம் செல்வமாகச் சிதறிக் கிடக்கின்றது; நாங்கள் வீதியில் செல்கிறோம், ஒன்றையும் காணவில்லை. -கீ

குழந்தைக்குப் பால்கொடுக்கும் தாய், அதை வலது கொங்கையிலிருந்து எடுத்தவுடன் குழந்தை வீரிட்டு அழுகிறது; மறு கணத்தில் இடது கொங்கையில் ஆருயிர்க்கு அமிழ்தம் கிடைக்கும் என்பதை அது உணர்வதில்லை. -கீ