பக்கம்:வைணமும் தமிழும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

வைணவமும் தமிழும்



(அ) வடகலை ஆசாரிய பரம்பரை

(1). திருக்குருகைப்பிரான் பிள்ளான் : (பிறப்பு. கி.பி. 1068) பிரசண்டாம்சம். திருமலையில் இவர் பெரிய திருமலை நம்பியின் திருமகனாக அவதரித்தவர், 'பிள்ளான்' என்றே வழங்குவர். உடையவருக்கு திருவடிசம்பந்தி, ஞானபுத்திரரும் ஆவார். உடையவரின் நியமனப்படி திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி என்ற முதல் வியாக்கியானம் அருளிய அருட் செல்வர். இவர் அருளிச் செய்த மற்றொரு நூல் ‘திருக்குருகைப் பிரான் பிள்ளான் பரமரகசியம்’ என்பது.

(2). எங்களாழ்வான் : (பிறப்பு கி.பி.108): விஜயாம்சம். இவர் திருவெள்ளறையில் சோழியர் குடியில் அவதரித்தவர். திருநட்சத்திரம் ஆனி - சுவாதி. எம்பெருமனார் நியமனத்தால் விஷ்ணுபுராணத்திற்கு விசிட்டாத்வைதபரமாக பரிபாவியத்திற்கிணங்க வியாக்கியானம் செய்தருளினார். திருக்குருகைப்பிரான் பிள்ளானிடம் ஸ்ரீபாஷ்யம் சேவித்தவர். நாடாதுரம்மாளைச் சுவீகரித்து பாஷ்யம் முதலிய கிரந்தங்களைச் சொல்லி வைத்தவர். ‘சாரார்த்த சதுஷ்டம்’, ‘சங்கதிமாலை இவர்தம் அருளிச் செயல்கள்.

(3). நடாதூரம்மாள் : (பிறப்பு கி.பி.1165), சுபத்திராம்சம். இவர் (பெண் அல்லர்) காஞ்சியில் தேவராசப்பெருமாள் என்பாருக்கு வரதகுரு என்று அவதரித்தார். திருநட்சத்திரம் : சித்திரையில் சித்திரை. இவர் உடையவரின் மருமகனாரான நடாதூர் ஆழ்வானுக்கு திருப்பேரர். வேறு திருநாமம் : வரதாச்சாரியார், ஆசாரியர், எங்காழ்வான். சீடர்கள் : சுருதப் பிரகாசிக பட்டர், வாதி ஹம்சம்பு, தாராசாரியர், கிடாம்பி