பக்கம்:நூறாசிரியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

35

அளவிலேயே, அவனை முழு ஆடவனாகச் செய்த காலத்தையே மிகவும் வியந்தாள் என்க,

இனி, தன் மகன் பெற்ற பிள்ளையைக் கண்ட அளவிலேயே தாய், அவனைத் தான் பிள்ளையாகப் பெற்றெடுத்த பொழுதையும், அப்பிள்ளை வளர்ந்து வந்த நிலையினையும் நினைவு கூர்ந்து இதனை உரைப்பாளாயினள் என்க.

தன் மகன் குழவிக் காலத்தை நினைவு கூர்வாள், முதற் கண் அவன் தன்னிடத்துப் பாலருந்திய காட்சியையே தன் அகக்கண் வழிக் கண்டாளாகையால், அதனையே தலையெடுத்துக் கூறுவாள் 'முலை முகம் பதிய மாந்தி' என்றாள். தன் முலையின் மிசை குழவியின் முகம் முற்றும் பதியும்படி பால் மாந்திய அக்காட்சி அவள் மறவாத பசுமைக் காட்சியன்றோ.

மாந்துதல் - வேட்கை தீர அருந்துதல்வயிறு முட்ட அருந்துதல் அவ்வாறு அருந்தியமையால், அக்குழவி பாலை 'ஆய்' என உமிழ்ந்தது என்க

பாஅல் ஒழுக வாய் வாங்கி - குடித்த கடைசி வாய்ப்பாலை விழுங்காது அது கடைவாயில் ஒழுகிக் கொண்டிருக்கும்படி தன் வாயை முலைக் காம்பினின்று எடுத்து.

இனி, முலை சுரக்கப் பால் குடித்த குழவி தாயின் முலைக்காம் பினின்று பால் தர்னே ஒழுகும்படி தன்வாயினை எடுத்துக் கொண்டது என்றும் கொள்க.

ஊ, ஆய் என உமிழ்ந்தது-"ஊ" இழிவுக் குறிப்பும் "ஆய்" அருந்தற்காகாத இழிபொருள் இடக்கரடக்கலாகக் கூறப்படுவதும். குழவியின் மழலை மொழி, வயிறு நிரம்பும் வரை பாலாக விருந்து நிரம்பிய பின் 'ஆய்' என இறுதி வாய்ப் பாலை உமிழ்ந்து காட்டியது என்க.

தந்தை கழிநகை பெறக் காட்டியது- அமிழ்தாகிய பாலை வயிறு புடைக்க மாந்தியதும் 'ஊ' 'ஆய்’ எனக் குழந்தை உமிழ்ந்து காட்டத் தந்தை உவகையால் மிகச்சிரித்தார் என்றபடி, தந்தை பெரிதாக நகைக்கும்படி 'ஊ' 'ஆய்' என உமிழ்ந்து காட்டி என்று கூட்டுக.

இழிந்து- இறங்கி மடியின் மேலமர்ந்து பாலருந்திய பின் ஊ ஆய் என உமிழ்ந்து தாயின் மடிவிட்டு இறங்கி என்றபடி

குறுநடந்தும் ஒடியும் முதுகு இவர்ந்து ஒக்கியும் இறங்கிய குழந்தை குறுகுறுவென நடந்ததும், பின் ஒடுதல் செய்ததும், தன்தந்தையின் முதுகின் மேல் ஏறி அவனைக் குதிரையாக எண்ணி ஓட்டுதல் செய்ததும், குழவி பாலருந்துங்காலத்துத்தந்தை அருகிருந்ததும்.அவனிடம் பாலை உமிழ்ந்து காட்டி அவனைக் குதிரை இவர்ந்ததும்.இவள் உள்ளத்தில் ஓவியமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/61&oldid=1221675" இலிருந்து மீள்விக்கப்பட்டது