பக்கம்:நூறாசிரியம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

369


உயிர் வாழ்தற்குரிய கட்டாயத் தேவைகள் ஆதலின் உண்டியும் உறக்கமும் கூறினார். பிறவெல்லாம் தாமே யடங்கும்.

மண்டிய கல்வி- தம்மிடத்து நிறைத்துக் கொண்ட கல்வியை மண்டுதல்திணிதல்,

மருவிலர்க்கு ஈந்த - தம்மொடு ஒன்றாதார்க்கும் இரக்கத்தான் வழங்கி

பகைவராயினும் அவருந் திருந்த வேண்டும் என்னும் இரக்க நெஞ்சால் அறிவுறுத்துதலின் ஈந்த என்றார். மருவிலர்-ஒன்னார்; பகைவர்.

தீமைஇல் - குற்றமற்ற

அறமும் பொருளும் இன்பமும் ஓங்கிய புகழின்-அறம் பொருள் இன்பங்கள் என்னும் பெருவாழ்வுக்குரிய கடைப்பிடிகளால் சிறந்த புகழைவிட

தாங்கிய செல்வத் தகவிலர் நோன்பு - செல்வத்தைச் சுமந்திருப்போரான தகுதியற்றவர்கள் கடைப்பிடிக்கும் நோன்பு,

செல்வப் பெருக்கம் புலப்படுமாறு நோன்பு என ஆரவாரித்தலின் தாங்கிய செல்வம் ஈண்டுக் குறிக்கப்பட வேண்டியதாயிற்று.

உயர்த்தோ - உயர்ந்த தாகுமோ?

உயர்ந்ததாகாது என்றவாறு - ஓகாரம் எதிர்மறைப் பொருட்டு.இப்பாடல் பொதுவியல் என்னும் புத்தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/395&oldid=1209686" இலிருந்து மீள்விக்கப்பட்டது