பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நண்பனே, ஒன்றாகவே நாம் இருவரும் இங்கே வந்தோம். இப்பொழுது எதிரும் புதிருமாய் செல்ல வேண்டிய நேரம். உனக்கு வாழ்த்து கூறி விடைபெறுகிறேன்.

உனது பாதை பரந்தது. உன்னெதிரே நேராய் தெரிகிறது. ஆனால் எனக்கோ, தெரியாத பாதைகளிலிருந்து அழைப்பு வருகிறது.

காற்றையும் முகிலையும் நான் பின் தொடர்வேன். குன்றுகளுக்குப் பின் தோன்றும் பகலுக்கு இட்டுச் செல்லும் விண்மீன்களைத் தொடர்ந்து செல்வேன். நான் காதலிக்கிறேன் என்கிற பாடலாகிய ஒரே இழையை மாலையாகத் தொடுத்து இணைந்து நடந்து செல்லும் காதலர்களைப் பின் தொடர்வேன்.

நாள்தோறும் உன் தலையை நிமிர்த்துகையில், ஒரு கடைக் கண் பார்வையின், கையசைப்பில், அலைகளின் மூலம் கடல் பேசுவதைப் போல், உன் காதல் பேசுகிறது.

-நா