பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அளவிலா ஆசை

லைகள் சலசலக்கும் உன் கிளைகளில் புகுந்து விளையாடும் காற்றாகிவிட வேண்டுமென்றும், பொழுது சாயச் சாய நீண்டு வந்து நீரில் படிய உனது நிழலாகிவிட வேண்டு மென்றும், உன்னுடைய உச்சாணிக் கிளையிலே வீற்றிருக்க ஒரு புள்ளினமாகிவிட வேண்டுமென்றும் நிழல்களுக்கிடையிலும் காணல்களுக்கிடையேயும் அந்த வாத்துகளைப் போல மிதந்து வர வேண்டுமென்றும் அவன் ஆசைப்பட்டதை யாராலும் அளவிட முடியாதுதான்!