பக்கம்:பதினாறும் பெறுக.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

26

26

காட்சி 10

இடம் : கமலவேணி வீடு.

காலம் : முற்பகல்.

(இளங்கோ. கமலவேணி இருவரும் இருக்கின்றனர்)

கமல : இளங்கோ! நம்முடைய நாடகத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு அந்தப் பிரவு என்னை அவமானப்படுத்தவே விரும்பினார்.

இளங்! நல்ல மூக்கறுப்பு அவரது முயற்சியை கல்லூரித் தலைவர் அழகாகத் தோற்கடித்துவிட்டார்.

கமல: செல்வரங்கம் பொல்லாத குணம் படைத்த நல்ல பாம்பு அடிப்பட்டுச் சென்றது காத்திருந்து கடிக்கும் என்பார்கள். உன் அப்பாவும், அவர் வார்த்தைக்கு மீற மாட்டாரே?

இளங் : எங்கப்பா அவருக்கு அளவுக்கு மிஞ்சி மரியாதை காட்டுகிறார்.அது ஏனென்று புரியவில்லை.

கமல : இதையெல்லாம் முன்னிட்டு நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன். இளங்கோ! என்னிடம் வெளிப்படையாகச் சொல்லா விட்டாலும் தாழம்பூவை நீ மணக்க விரும்புவது எனக்குத் தெரியும்.

இளங் : நிரம்ப மகிழ்ச்சி! நானே. . . . . . அதை...... உங்களிடம் . . . .

கமல : தேவையில்லை. ஒரு பேராசிரியரின் மகளான தாழம்பூவை மணந்துகொள்ள, உன்னைப்போன்ற ஒரு பட்டப்படிப்பு மாணவனுக்கு இருக்கும் தகுதி வேறு யாருக்கு இருக்க முடியும்? ஆனால் எனது விருப்பம். . . . . . .

இளங் : என்னவென்று சொல்லுங்க,

கமல :செய்தக்கவல்ல செயக்கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும்’ என்ற வள்ளுவர் வழியில் செல்பவள் நான். செல்வரங்கமும், உன் அப்பாவும் எனது இலட்சிய விரோதிகள். நான் அழுவதைக்கண்டு அவர்கள் சிரிக்க விரும்புகிறார்கள்.

இளங் : நீங்கள் நினைப்பதுபோல், என் தந்தை அவ்வளவு கொடியவரல்ல.

கமல : ஒரு கொடியவனின் கையிலிருக்கும் கூர்மையான வாள் அதற்கு நான் தப்பியாகவேண்டும். ஆகவே இளங்கோ! உங்கள் திருமணத்திற்கு நான் ஒரு நிபந்தனை விதிக்கிறேன். (கையில் காபி டம்ளர்களோடு தாழம்பூ வருகிறாள்)

இளங்: நிறைவேற்றக் கூடியதுதானே ?

கமல: மிகச் சுலபம். தாழம்பூவை நீ மணந்துகொள்ள விரும்பினால் அவள் மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றுவிடாமல் நீ குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளவேண்டும்.

இளங் : அடேயப்பா! நான் என்னவோ என்று பயந்து போய்விட்டேன். இந்த நிபந்தனை எனக்கு நானே விதித்துக்கொள்ள வேண்டியதாயிற்றே.


கமல : இதை உனது வாக்குறுதியாக நான் வைத்துக்கொள்ளலாமா?

இளங் : மெய்யாக, நிச்சயமாக உண்மையாக இது என் வாக்குறுதி !