பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இர் தொல்காப்பியம்-பொருளதிகாரம்

உ0சு. செறிவும் நிறைவும் செம்மையுஞ் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பா லான.

இளம் பூரணம் :

என்-எனின். இது பெண்டிர்க் குரியதோர் இயல்புணர்த்திற்று.

(இ - ள்.) செறிவு என்பது-அடக்கம்.

நிறைவு என்பது-அமைதி.

செம்மை என்பது-மனங்கோடாமை

செப்பு என்பது-சொல்லுதல்

அறிவு என்பது-நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் அறிதல்.

அருமை என்பது-உள்ளக் கருத்தறிதலகுமை. இவை எல் லாம் பெண் பக்கத்தன என்றவாறு.

இதனாற் சொல்லியது மேற்சொல்லிய அறத்தொடுநில்ை வகையும் இனிக் கூறுகின்ற வரைவுகடாதற்குப் பகுதியும் உண்மை வகையானும் புனைந்துரை வகையானும் கூறுங்கால் இவை பேதை யராகிய பெண்டிர்க்கு இயையுமோ என ஐயுற்றார்க்குக் கூறப் பட்டது. - (கச)

நச்சினார்க்கினியம் :

இது, மறைபுலப்படாமல் ஒழுகுதல் இலக்கணமென்றற்கும் மறைபுலப்படுத்துதல் வழுவென்றற்குங் கூறுகின்றது.

  • * * * * * * * * * * * * * * * * *

s - w - - - * 1. ‘கிறையும்’ என்பது கச்சினார்க்கினியர் கொண்ட பாடம். கிறைவும்' எனப்

படங்கொண்டு கிறைவு என்பது அமைதி” எனப் பொருள்கொண்டார் இளம்பூரணர். 2. மேற்சொல்லிய அறத்தொடு கிலைவகையும் இனிக் கூறுகின்ற வரைவு கட்ாதற் பகுதியும்' என்றிருத்தல் வேண்டும்.

8. மேற்கூறியவாறு எளித்தல் முதலாக எழுவகைப்பட அமைந்த உரைத் திறங்களால் அறத்தொடு கிற்றலும் வரைதல் வேட்கை வரைவு கடாதற் பகுதி களாற் குறிப்பினாலும் தம் உள்ளத்துணர்வுகளைத் தலைவனுக்கு வெளியிட் டுரைத்தலும் என உண்மைவகையாலும் படைத்து மொழிதலாகிய புனைந்துரை ல் கைய்ாலும் கிகழ்த்தும் இவ்வுரையாடல் பேதையராகிய பெண்டிர்க்குப் பொருங் துவதோ என ஐயுற்ற மாணவரை கோக்கி ஐயம் அகற்றுவதாக அமைந்தது இச் சூத்திரம் என்பது இளம்பூரணர் கருத்தாகும்.