பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் தொல்காப்பியம்-பொருளதிகாரம்

'மரி இயமருங்கு’ என வரும் இச்சூத்திரத தொடர்க் குக் * களவொழுக்கம் நீட்டித்தபக்கம்’ எனப்பொருள்கொண்டு, இளம் பூரணர் கூறியவுரையே முன்னும் பின்னுமுள்ள சூத்திரங்களோடு தொடர்புடையதாக அமைந்துள்ளது. இனி, மரீஇயமருங்கு’ என பதற்குப் புலனெறி வழக் களுசெய்து மருவிப்போந்த கைக் கிளை பெருந்திணைக்கண்' எனப்பொருள் கொண்டார் நச்சினா க் சினியர். "அன்பினைந்தினைக் களவொழுக்கம் பற்றிய விதிகளுக் க. டையே கைக் கிளை பெருந்திணை பற்றிய கூற்றுக்களைப் பற்றிய விதி இடம்பெறுதற் கியைபின்மையின. இச்சூத்திரத்திற்கு இளம் பூரணர் உரையே பொருத்தமுடையதெனக் கொள்ளர் பாலதாகும்.

உ0க, தேரும் யானையுங் குதிரையும் பிறவும்

ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப. இளம்பூரணம்: -

என்-எனின் இது தலைமகற்குரியதோர் மரபுணர்த்திற்று.

(இ ள்.) களவுகாலத்துத் தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்து சேறலும் உரியர் என்றவாறு. களவின் கண் என்பது அதிகாரத்தான் வந்தது.'

'நெடுந்தேர் கடாஅய்த் தமியராய் வந்தோர்

கடுங்களிறு காணிரோ என்றீர்-கொடுங்குழையார் யானை அதருள்ளி நிற்பரோ தம்புனத்து ஏனல் கிளி கடிகு வார்."

பிறவு மன்ன.

"ஊர்ந்தன. ரியங்கலு முரியர்’ என்றமையால் தனி வருதல் பெரும்பான்மை. இதனை எச்சவும்மையாக்கி வையமூர்தலும் இளையரோடு வருதலுங் கொள்க.

1. இவ்வியல் பக-ஆ. நூற்பா முதல் களவொழுக்கம் பற்றிய விதிகளே தொடர்ந்து கூறப்பட்டு வருதலால், 'தேரும் யானையும் குதிரையும் ஊர்ந்தனர் இயங்கல் "கள வின் கண் என்பது அதிகாரத்தான் வந்தது’ என்றார். கற்பின் கண் இத்தகைய ஊர்திகளை கர்ந்து செல்லுதற்குத் தடையின்மையின் என்க.

கர்ந்தனர் இயங்கலும் உரியர் என் புழி உம்மை எதிர்மறையாதலின் ஊர்திகளில் ஒரோவழிச் செல்லுதலன்றிப் பலமுறை செல்லுதல் கூடாதென்பதும் பலமுறை தொடர்ந்து உணர்திகளிற்செல்லின் களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாய் வெளிப்படும் என்பதும் புலப்படுத்தியவாறு.