பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-து ற்பா உஉ @f ఢి.

(இ-ள். உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் - உயர்ந்த மக்கள் கூறுங் கூற்றும் வேதநெறியோடு கூடுதலின்; ” வழக்கு வழிப்படுத்தல் செய்யுட்குக் கடனே-அவ் வழக்கினது நெறியிலே தடத்தல் செய்யுட்கு முறைமை (எ-று.)

'வழக்கெனப் படுவது' (தொல், பொ. 648) என்னும் மரபியற் சூத்திரத்தான் வழக்கு உயர்ந்தோர் கண் ண் தாயிற்று. அவர் அகத்தியன் முதலியோரென்பது பாயிரத் துட் கூறினாம். அவை சான்றோர் செய்யுளுட் காண்க. இதனை மேலைச் சூத்திரத் திற்கும் எய்து விக்க.

(உக.) ஆய்வுரை இஃது பொருளதிகாரத்திற் கூறப்படும் அகமும் புரமு மாகிய ஒழுகலாறு பற்றிய செய்யுட்கு இன்றியமையாத தோர் இயல்புணர்த்துகின்றது.

(இ-ள்) உயர்ந்தோர் கூறும் பொருளுரைகள் உலகியல் வழக் கொடு பொருந் தி நிகழ்தலால் அவ்வழக்கின் நெறியிலே பொருந்தி நடத்தல் செய்யுட்குரியதோர் முறைமையாகும். எ-று.

எனவே உலகியல வழக்கிற்கு மாறான பொருள்கள் செய். புட்களில் இடம்பெறா என்பதாம் . இனி முன்னைய நூல் களில் அகப்பொருளாகவும் புறப்பொருளாகவும் எடுததோதப் பட்டனவன்றித் தம் காலத்து வாழும் சான்றோர்கள் தமது வாழ்க் கைப்பயிற்சியால் தெளிந்து கூறுவன வும் உயர்ந்தோர் வழக்கென ஏற்றுக் கொள் ளத் தக் கன வாதலின் உயர்ந்தோர் வழக கொடு பொருந்தி வருவன வெல்லாம் செய்யுட்குப் பொருளாகப் புனர்க்கப் படும்' என இச்சூத்திரத்திற்குப் பொருள் கொள்ளுதலும் ஏற்புடையதேயாம் என்பது இளம்பூரண வடிகள் கருத்தாகும்.

1. உயர்ந்தோர் கிளவி வழக் கொடு புணர்தலின்' என்பதே இளம்பூரணர் கோண்ட பாடம். "உயர் க்தோர் கிளவியும்’ எனப் பாடங்கொள்ளுங்கால் தாழ்க் தோர் கிளவியேயன்றி உயர்க்தோர் கிளவியும் வழக்கொடு புனர்க்து வருதலால் எனப்பொருள் கொண்டு வழக்கு என்றது உலகில் உயர் க்தோர் தாழ்க்தோர் வழங் கும் இருவகை மொழிவழக்குகளையும் குறித்ததாகக் கொள்ளுதல் வேண்டும். அங் கனம் கொள்ளின் வழக்கெனப்படுவதுயர்ந்தோர் மேற்றே எனப் பின்வரும் மரபி யற் சூத்திரத்தொடு மாறுகொள்ளும் என்க.

2. இங்கு வழக்கென்றது வழக்குஞ் செய்யுளும் ஆகிய இருவகையுள் உலகியலில் இடம்பெற்றுள்ள தமிழின் மொழி வழக்கினையே குறிப்பதன்றி வேத கெறியினைக் குறிப்பதன்றாம். எனவே வழக்கு என்பதற்கு வேததெறியென கச் சினார்க்கினியர் கூறும் பொருள் பொருக்தா தென்க.