பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பாக

ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே செவ்வான் அன்ன மேனி அவ்வான் இலங்குபிறை அன்ன விலங்கு வால் வையெயிற்று எரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா அமரரு முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய

யாழ்கெழு மணிமிடற் றந்தனன் தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே.'

(அகம். கடவுள் வாழ்த்து.)

இதற்குக் கொன்றையாலமைந்த தாரினனாய் மாலையனாய்க் கண்ணியனாய் நுண் ஞாண் மார் பினனாய் இமையா நாட்டத்து துதலினனாய்க் கணிச்சியு மழுவு மூவாய் வேலும் ஏந்திய கையி னனாய் யாவர்க்குந் தோலாதோனுமாய் ஏற்றினையு மூர்ந்து உமையாளையுஞ் சேர்ந்து செவ்வானன்ன மேனியையும் பிறை போன்ற எயிற்றினையும் எரி போன்ற சடையினையும் திங்க ளோடு சுடருஞ் சென்னியையும் உடையனாய் மூவாவமரர் முதலிய யாவரு மறியாத் தொன்முறை மரபினனாய்ப் புலிய தளையும் உடுத்த யாழ்கெழு மணிமிடற் றந்தணனது சிவானு பூதியிற் பேருலகந் தங்கிற்று ' எனப் பொருள் உரைக்குங் காலத்து அதன் கண் இடைக்கிடந்த சொற்கள் முன்னொடு பின் வாய்பாடு கள் சேராதன்றே அவ்வழி அவ்வாய்பாட்டாற் போந்த்

1. யாழ்கெழு மணிமிடற் றந்தணனாகிய சிவபெருமானது திருவடித் துணையே மன் னுயிர்களுக்குப் பிறவியாகிய வெம்மையினை நீக்கி வீடுபேறாகிய தண்ணிழல் தக்தருளும் என்பது தோன்றத் தாள் நிழல் என்றார். தாள் நிழல் என்பதற்குச் 'சிவானுபூதி எனவும், உலகு என்ற து உயர்ந்தோராகிய சிவ ஞானிகளைக் குறிக் கும் என்பதுதோன்றப் பேருலகம்' எனவும் இளம்பூரணர் உரை வரைந்துள்ளார். இவரது உரை விளக்கம், கலம்புரி கொள்கைப் புலம் பிரிந்துறையும் செலவு. (திருமுருகு-68) என வரும் திருமுருகாற்றுப்படைத் தொடரையும், "தென்னன் பெருந்துறையான்.தாட்டாமரை காட்டித் தன் கருணைத்தேன் காட்டி (திருவம் மானை) எனவரும் திருவாசகத் தொடரையும் நினைவுகரும் முறையில் அமைக்.

துள்ள மை கருதத் தகுவதாகும்.

2. சேர்ாதன்றே-சேராதல்லவர்?