பக்கம்:நூறாசிரியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

நூறாசிரியம்


மாவினும் புள்ளினும் மயங்கியோர் நம்மை அசைப்பவும் செய்வர் ஆகையால் அவர்வழித் தப்புவான் வேண்டி மண்ணினும் திண்ணுக என வேண்டியதாயிற்று.

நுண்ணிய அணுவினும் துண்ணிய தாகுக : கரந்துறைதலும் கருவா யுறைதலும் அணு நுண்மை எய்திய விடத்துப் பருமை பற்றாதாம். எனவே நுண்ணியதாகுக எனப் பெற்றது.

வான் போலும் உயர் நெஞ்சும், மீன் போலும் படர் நினைவும், மின் போலும் சுடர் அறிவும், வாரி போலும் வன் வலியும், வளி போலும் வெல் திறலும், தணல் போலும் கொல் திறலும், தண் போலும் குளிர் ஒடுக்கும், மண்போலும் திண்பாடும், அணுப் போலும் துண் கரப்பும் கொண்டு, ஆவியும் மெய்யுமாய் ஆகி நின்ற மாந்தர் எனும் மாவினும் புள்ளினும் மயங்குற நிற்பாரிடத்து விளங்குக என்றவாறு.

இப் பாட்டும் புறத் தினையும் பொருண் மொழிக் காஞ்சியென் துறையுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/110&oldid=1181929" இலிருந்து மீள்விக்கப்பட்டது